மகளிருக்கு 33% இடஒதுக்கீடு.. சொன்னதை செய்து காட்டுவதில் உறுதியாக இருக்கிறோம்.. மோடி வீடியோ
டெல்லி: ''மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக தொடர்கிறது. அதற்காக போராடியவர்களில் நானும் ஒருவன். அதன்படி மகளிருக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்'' என பிரமதர் மோடி எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை லோக்சபாவும், டிசம்பர் 2 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை ராஜ்யசபாவும் கூட உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான
அரசியல் சாசன 132வது திருத்தம், மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை (இரண்டாம்) திருத்த மசோதா 2026, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை திருத்த மசோதா 2026 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்னர்.
இந்த மசோதாக்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு எம்பிக்கள் அதாவது 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். தற்போது திமுக, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி எம்பிக்கள் மத்திய அரசின் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளது.
We had made a promise to our Nari Shakti and we remain committed to fulfilling it... https://t.co/ZT3TK71Psh
— Narendra Modi (@narendramodi) November 28, 2026
இந்நிலையில் தான் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பிரமதர் மோடி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''மகளிருக்கு சக்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில்33% மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மகளிருக்கான உரிமைகளை வழங்குவதற்கு தடையக இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவோம். இதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக தொடர்கிறது. அதற்காக போராடியவர்களில் நானும் ஒருவன். இதனை நிறைவேற்றுவோம்'' என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
