சீதையாக நடித்ததால் வந்த ட்ரோல்.. நறுக்குன்னு சாய் பல்லவி கேட்ட கேள்வி.. பாராட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமாயணா படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்தது வெளியானதில் இருந்து அவரை சுற்றி ஏதாவது ஒரு விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் சீதை கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழுப்பினார்கள். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று விமர்சித்தார்கள். இப்போது வேறு ஒரு பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியதையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு சாய் பல்லவி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாக நடித்துள்ள ராமாயண திரைப்படம் வெளியான பிறகு அவரது நடிப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் வந்தன. பலரும் சாய்பல்லவியின் இயல்பான நடிப்பை பாராட்டினாலும் சீதை கேரக்டருக்கான தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும், அதற்கு இவர் பொருத்தமான தேர்வு கிடையாது என்று சோசியல் மீடியாவில் விமர்சித்தனர். ஒரு சில பிரபலங்கள் கூட சீதையாக சாய்பல்லவி நடித்தது பொருத்தமாகவே இல்லை என்று வெளிப்படையாகவே பேசி இருந்தனர்.

சாய் பல்லவி பேட்டி

இந்த சூழலில் We The Women நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்பல்லவியிடம் சீதை கதாபத்திரம் குறித்த விமர்சனங்கள் பற்றி பேசப்பட்டது. அதற்கு அவர், "சீதா மாதா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சோசியல் மீடியாவில் நான் பார்க்காமல் இல்லை. ஆனால் இது போன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியை குறைக்கும். ஆனால் நாம் நம்மை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்னை பொருத்தவரை ஒரு மனிதராக என்னால் முடிந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறேன். கருத்துக்கள் என்பவை கருத்துக்கள் மட்டும் தான். நமக்குள் தன்னம்பிக்கையையும், மன உறுதியும் இருந்தால் உலகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்". மேலும், "ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தின் ஒரு பகுதியை நம்முடைய மனதிற்குள் சுமந்து செல்வோம். சீதை கதாபாத்திரமும் என்னுள் சில தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த மாற்றங்கள் தனக்கு மட்டுமே உரியவை" என்று தெரிவித்திருக்கிறார்.

Sai Pallavi Ramayana Sita Cinema News Actress Trolling

சாய்பல்லவி ட்ரோல்

சாய் பல்லவியின் இந்த பதிலை பார்க்கும்போது அவர் விமர்சனங்களை புதிதாக எதிர்கொள்ளவில்லை என்பது புரிகிறது. ஏற்கனவே ராமாயணம் படத்தில் சீதையாக நடித்ததற்கு மட்டுமல்லாமல், அவர் சமீபத்தில் ஓம் படத்தில் நடித்த போது இவருக்கு மட்டும் என்ன அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் "இஞ்சி வெல்லம்" படத்தின் ஆச்சி ஆச்சி பாடல் வெளியானது. அதிலும் அவருடைய கேரக்டர் ஸ்டைல் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Sai Pallavi Ramayana Sita Cinema News Actress Trolling

ரசிகர்கள் கேள்வி

சோசியல் மீடியாவில் நடிகைகளை தொடர்ந்து ட்ரோல் செய்வார்கள் என்று சில நடிகர்கள் பேசி இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரும் ட்ரோல்களை பார்க்கும்போது அந்த சூழல் உண்மைதானா? அதுபோலத்தான் சாய்பல்லவிக்கும் நடக்கிறதா? என்று விவாதமும் எழுந்துள்ளது. விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றாலும் ஒரு நடிகையின் ஒவ்வொரு செயலையும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது எந்த அளவுக்கு நியாயம்? என்பது தான் இப்போது ரசிகர்கள் எழுப்பும் கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+