தொகுதி மறுவரையறை மசோதா எந்தெந்த கட்சிகள் எதிர்ப்பு..டெல்லி காங்.,ஆலோசனையில் பங்கேற்றது யார் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் மீண்டும் மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர உள்ளது. இதற்கு 'இந்தியா' கூட்டணியில் உள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த ஆலோசனையில் எந்தெந்த கட்சியினர் பங்கேற்றனர் என்பது பற்றி விவரம் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் லோக்சபாவில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இதன்மூலம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றம், சட்டசபையில் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவும் தாக்கலாக உள்ளது.

delimitation congress india bloc

இந்த மசோதாவிற்கு 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆதரவு தெரிவித்தது. ஆனால் பிற 'இந்தியா' கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக தனக்கு ஏற்றபடி தொகுதி மறுவரையறை செய்ய முயன்றுள்ளதாகவும், தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகித்தார். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், பவன் கேரா,உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம் உள்பட இன்னும் சிலர் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர 'இந்தியா' கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அதன்படி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ( ஆர்ஜேடி), ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி), புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) கட்சிகளின் எம்பிக்கள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அணியை சேர்ந்த அபிசேக் பானர்ஜி உள்ளிட்டவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்கள் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

தமிழக கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சனையால் திமுக, காங்கிரஸை விட்டு விலகியே உள்ளது. அதுமட்டுமின்றி
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திமுக மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிறைவற்ற அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்ற அவைகளில் 3ல் 2 பங்கு ஆதரவு வேண்டும். அதாவது லோக்சபாவில் 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அவ்வளவு எம்பிக்கள் இல்லை.

ஆனால் திமுக, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியின் எம்பிக்களின் ஆதரவு இருந்தால் பாஜகவால் எளிதாக 360-யை நெருங்க முடியும். இதனால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்பட பிற கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+