காசு பணம் துட்டு மணி மணி.. மிதுன ராசிக்கு டபுள் தமாக்கா.. தொட்டதெல்லாம் வெற்றி

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் மாத ராசி பலன்: நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. இது 12 ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வேலை, தொழில், குடும்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ராகு கேதுக்கள் கும்பம், சிம்ம ராசியில் இருந்து மகரம், கடகத்திற்கு மாறக்கூடிய அமைப்பு 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அமைப்பைக் கொடுக்கும். மாதம் முழுவதும் சிம்மத்தில் குருவும், செவ்வாயும் மங்கள யோகத்தில் சேர்ந்திருப்பது நல்லவிதமான அமைப்பு. மருத்துவம், கட்டடம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற தொழில்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானங்கள் இருக்கும்.

mithunam december rasi palan

குருவும், சுக்கிரனும் துலாம் வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். புதன் பகவான் குருவின் பார்வையில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருக்கும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு அட்டகாசமான பலன்கள் இந்த மாதம் முழுவதும் கிடைக்கும். புதன் வலுவாக இருக்கிறது. குருவின் பார்வை ராசிக்கு இருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களை விட, பின் இரண்டு வாரங்கள் அற்புதமாக இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். பாக்கிய ஸ்தானமான 5, 9 வலுவாக இருக்கிறது. லட்சியங்கள் நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும்.

பண வரவு கொட்டும்

நல்ல பண வரவுகள் கிடைக்கும். இதுவரை சம்பாதிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு வருமானங்கள் கிடைக்கும். சொந்தக்காலில் நிற்பீர்கள். சிலருக்கு இரட்டை வருமானம் கிடைக்கும். கணவன், மனைவியால் வருமானம் வரும். சிலருக்கு பிள்ளைகள் சம்பாதிக்கக் கூடிய அமைப்பு ஏற்படும். பண வரவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

வருமானம் பெருகும்

காவல் துறை, ராணுவம் போன்ற சீருடைப் பணியில் இருப்பவர்கள், செக்யூரிட்டி ஆபிசர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு பெரிய நன்மைகள் ஏற்படும். செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். ராசியை ராசிநாதனே பார்ப்பது பெரிய தன்னம்பிக்கையைத் தரும். வேலை போனாலும் அதற்கடுத்து வரும் மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அடுத்த சனிப்பெயர்ச்சி 11 ஆம் இடத்தில் உங்களுக்கு நடைபெறும்.

காதல் இனிக்கும்

வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்குப் பெரிய பாதிப்புகளைத் தராது. மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதமாக இருப்பதால் நன்மைகள் கூடுதலாகக் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சிலருக்குப் புதிதாக காதல் மலரும். ஏற்கனவே காதல் இருப்பவர்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். கூட்டு முயற்சிகள் பழிக்கும்.

குழப்பம் தீரும்

நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பரைச் சந்திக்கக்கூடிய அமைப்பு. அவர்களுடன் மனம் விட்டுப் பேசக்கூடிய மாதமாக இருக்கும். தம்பி தங்கையின் வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொட்டது துலங்கும். வருமானம் இரட்டிப்பாகும், பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+