திருப்பரங்குன்றத்தில் எல்லாமே ரெடி.. மலைக்கு கொண்டு செல்லப்பட்ட கொப்பரைகள்! பூஜை செய்த நீதியரசர்கள்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் கொப்பறை, நெய், சூடம், திரி உள்ளிட்ட பொருட்களை வைத்து நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்தீபன் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்பட வழிபாடு முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்து தீபம் ஏற்றும் மலை பாதைக்கு செல்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீடித்து வந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வை அமைதியான முறையில் நடத்துவதற்கும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்கும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் இருந்து சுமார் 130 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புப் பணிக்காக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெற உள்ள தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரம், மலைக்குச் செல்லும் பாதைகள், கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தூணில் ஏற்றப்பட உள்ள தீபத்துக்காக 3 கொப்பரைகளை கோவில் நிர்வாகத்தினரிடம் நீதி அரசர்கள் ஒப்படைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் கொப்பரைகள், நெய், சூடம், திரி உள்ளிட்ட பொருட்களை வைத்து நீதிபதிகள் வைத்தியநாதன் பார்த்திபன் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்திடம் 3 கொப்பரைகள் ஒப்படைக்கப்பட்டன. பூஜை செய்யப்பட்ட தீப கொப்பரைகள் மலைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது, மேலும் தீபம் ஏற்ற தேவையான நெய்ம் திரி உள்ளிட்டவையும் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
