விராலிமலை இடைத்தேர்தல்.. உச்ச பதவியை பிடிக்க களமிறங்கிய திமுக தலைகள்.. உற்சாகத்தில் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: திமுகவில் புதுக்கோட்டை மாவட்டம் 3ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், அங்கு மாவட்டச் செயலாளர் பதவியை பிரிக்க பலரும் போட்டியில் குதித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு வயது வரம்பு காரணமாக பதவி மீண்டும் கிடைக்காது. தற்போது விராலிமலை தொகுதி இடைத்தேர்தல் வருவதால், புதுக்கோட்டை திமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது.

விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த விஜயபாஸ்கர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் விராலிமலை தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. விஜயபாஸ்கர் தனது வெற்றியை உறுதி செய்ய அதிமுக மற்றும் திமுகவில் இருந்து நிர்வாகிகளை தவெக பக்கம் இழுத்து வருகிறார்.

DMK Viralimalai By Election

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற பலரும் தீவிரமாக காய் நகர்த்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு வயது வரம்பு காரணமாக மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்பே இல்லை. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தை திமுக தலைமை 3ஆக பிரித்துள்ளது.

புதுக்கோட்டை வடக்கு, கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மேற்கு மாவட்டமான திருமயம் மற்றும் விராலிமலை தொகுதி மாவட்டச் செயலாளர் பதவி வர ரகுபதி தனது மகன் அண்ணாமலையை கொண்டு வர காய் நகர்த்தி வருகிறார். மறுபக்கம் தென்னலூர் பழனியப்பன் கண்டிப்பாக மாவட்டச் செயலாளராக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

விராலிமலை தொகுதியில் திமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதனால் அதனை மாற்ற தன்னால் முடியும் என்று திமுக தலைமையிடம் பழனியப்பன் பேசி இருக்கிறார். விராலிமலை இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், புதுக்கோட்ய்டை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க மிகப்பெரிய போட்டி நடக்கிறது.

அதேபோல் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தை பிடிக்க செல்ல பாண்டியன், எம்.எம்.அப்துல்லா, முத்துராஜா உள்ளிட்டோர் காய் நகர்த்துகின்றனர். மறுபக்கம் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மெய்யநாதன், பரணி கார்த்திகேயம், உதயம் சண்முகம் உள்ளிட்ய்டோர் களமிறங்கியுள்ளனர். ஒரே மாவட்டத்தில் இவ்வளவு பேர் போட்டி போடுவதால், திமுக தலைமையும் உற்சாகம் அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+