உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில்.. காக்கா கழுகு கதை சொன்ன கவிஞர் பா விஜய்! வந்தாச்சு விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா விஜய் காக்கா கழுகு பற்றி ஒரு குட்டி கதையை சொன்னார். ஆனால் அவர் சொன்ன கதையில் வெறும் பறவைகள் மட்டும்தான் இருந்தன என்று கடந்து போக முடியவில்லை. அவர் பேசிய விதமும், பயன்படுத்த வார்த்தைகளும் முதல்வர் விஜய்யை மனதில் வைத்து சொல்வது போல இருக்கிறது என ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

PA Vijay Udhayanidhi Stalin Rajinikanth Vijay Crow Eagle Controversy Tamil Political News

மீண்டும் காக்கா கழுகு கதை

அவர் பேசும்போது," பறவைகளில் கழுகுக்கு மட்டும் மிதமான திமிர் இருக்கும். எவ்வளவு பெரிய கழுகை காக்காக்கள் துரத்தி விடும். அப்போது நாம தான் வானத்துக்கு ராஜா என்று காக்கா நினைத்து விடும். உடனே கழுகு சண்டை போடாது, அது கொஞ்சம் மேகத்துக்கு மேலே போய்விடும். அது என்ன சொல்கிறது என்றால் என் லெவல் இது, நீ முடிந்தால் இங்கே வந்து சண்டை போடு என்று சொல்கிறது. அதுதான் அந்த கழுகின் ஆட்டிட்யூட்' என்று பேசினார்.

அதோடு நிற்காமல், அரங்கில் இருந்தவர்களை கழுகுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "அரங்கம் நிறைய நிறைந்து இருக்கும் அத்தனை கழுகுக்கும், கழுகுகளை வளர்ப்பதில் கைதேர்ந்த ராஜாளி கழுகான கலைஞரின் தொண்டர்களுக்கும் வணக்கம்" என்று தெரிவித்தார். இப்போது இந்த பேச்சுதான் இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. குறிப்பாக "காக்கா கீழே இருந்து துரத்தினாலும் கழுகு அதனுடன் சண்டை போடாமல் இன்னும் உயரத்துக்கு செல்வது, தன்னுடைய உயரத்துக்கு வர முடியுமா? என்று சவால் விடுவது" போன்ற வார்த்தைகள் அரசியல் ரீதியாக அவர் விஜய்யை வம்பு இழுத்து பேசி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர்.

ரஜினிகாந்த் சொன்ன கதை

காரணம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, காக்கா கழுகை தொந்தரவு செய்வது கழுகு அதற்கு பதிலடி கொடுக்காமல் மேலே மேலே பறப்பது என அந்த கதையை பற்றி ரஜினி பேசி இருந்தார். அப்போது ரஜினி பேசிய காக்கா கழுகு கதை விஜய்யை குறி வைத்து தான் என்ற விவாதமும் ரசிகர்களிடம் பெரிய அளவில் நடந்தது. அதை வைத்து விஜய் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ரஜினியை அதிகமாக ட்ரோல் செய்து வந்தனர்.

விஜய்யின் பதிலடி

அதற்குப் பிறகு விஜய், தனது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சுக்கு பதிலடியாக பேசியிருந்தார். யார் பெரியவர்? யாருடைய உயரம் என்ன? ரசிகர்கள் உருவாக்கும் பட்டங்கள் என அந்த நேரத்தில் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் இன்னும் சினிமா ரசிகர்களுக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டிருந்த விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிட்டார்.

ரசிகர்கள் கருத்து

பழைய சினிமா போட்டிகள் இப்போது அரசியல் விமர்சனங்கள் ஆகும் மேடைப்பேச்சுகளாக மாறிவிட்ட சூழலில், பா விஜய் மீண்டும் கழுகு காக்கா கதையை எடுத்திருப்பது அந்த பழைய விவாதத்தை மீண்டும் தோண்டி எடுத்து இருக்கிறது. அவர் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், என் லெவல் இது.. முடிந்தால் இங்கு வந்து சண்டை போடு என்ற வார்த்தைகள் இவர் விஜய்யை தான் விமர்சிக்கிறார் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். உதயநிதியின் பிறந்தநாள் மேடையில் இப்படி ஒரு கதையை சொல்லி இருப்பது கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+