Fair Delimitation: தொகுதி மறுவரையறை மசோதா! காங்கிரஸ் பல்டி! மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பல்டி அடித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் அந்த மசோதாவுக்கு திமுக ஏன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுவரைவு மசோதாவை (Delimitation) மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதாவில் குறிப்பிட்டிருந்த சில அம்சங்களுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

mk stalin dmk

அதாவது நியாயமான தொகுதி மறுவரையறையை (Fair Delimitation) திமுக ஆதரிக்கும் என சொல்லி இரு திருத்தங்களையும் சொல்லியிருந்தது. அதாவது நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

ஆகிய இரு திருத்தங்களைத்தான் திமுக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த திருத்தங்கள் இல்லாமல் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கும் வகையில் மசோதா அறிமுகமாகி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெறாமல் தோல்வியடைந்தது.

இதனால் நேற்றைய தினம் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திருத்தங்களுடன் அறிமுகம் செய்தது. அதில் ஸ்டாலின் சொன்ன அந்த இரு திருத்தங்களுடன் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த திமுக எம்பிக்கள் கூட்டம் கூடியது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், காங்கிரஸ் Fair Delimitation என சொல்லிவிட்டு தற்போது No delimitation என பல்டி அடித்துவிட்டது.

உணர்ச்சி வசப்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சினையை அணுகியுள்ளோம். திமுக முன்வைத்த 2 கோரிக்கைகளும் மசோதாவில் உள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக இந்தியாவில் முதல்முறையாக குரல் கொடுத்தது திமுகதான் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+