தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவிட்டால் என்ன ஆகும்? தமிழகத்தின் 39 தொகுதிகள் 32 ஆக குறையுமாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரம் திமுக மற்றும் என்சிபி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் குறையுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் இருக்கும் தொகுதிகள் அப்படியே 50% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் எதிர்த்தாலும் கூட என்சிபி, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Delimitation Bil lParliament Tamil nadu Lok Sabha

தொகுதி மறுசீரமைப்பு மசோதா

இந்த மசோதா ஏன் முக்கியம்.. இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேறவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையில், இந்த மசோதா நிறைவேறவில்லை என்றாலும் தொகுதி மறுவரையறை நடைபெறாமல் போகாது. அரசியலமைப்பு சட்டத்தின் 81 மற்றும் 82வது பிரிவுகளின்படி, 2026ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானதும் தொகுதி மறுவரையறை நடவடிக்கை தொடங்கும். அதாவது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு, புதிய சட்ட திருத்தம் இல்லாவிட்டாலும் இந்த பணி கட்டாயமாக நடைபெறும்.

7.2% இடங்கள்

அதாவது ஒட்டுமொத்த தொகுதிகள் 543ஆகவே இருக்கும். அது உயராது. ஆனால், அது மாநிலங்களுக்கு இடையே மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும். தற்போது லோக்சபாவில் உள்ள 543 தொகுதி என்பது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கு சுமார் 7.2% இடங்கள் உள்ளன. அதேநேரம் புதிய கணக்கெடுப்பு விவரங்கள் வந்ததும், மாநிலங்களுக்கான தொகுதிகள் புதிதாக பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் தொகுதிகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படும்.

எனவே, மக்கள் தொகை அதிகமாக வளர்ந்துள்ள உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். அதேநேரத்தில் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தியுள்ள தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. புதிய மசோதா நிறைவேறாமல் போனால் இதுதான் பெரிய சிக்கல்!

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும்

2026 மக்கள் தொகை முடிவுகள் வந்தால் தான் தொகுதிகள் துல்லியமாக எப்படி பிரியும் என்பது தெரியும். அதேநேரம் 2011 டேட்டாவை வைத்து நமக்கு ஓரளவுக்கு எவ்வளவு தொகுதிகள் மாறும் என்பது தெரிய வரும். அதன்படி பார்த்தால் தமிழகத்தின் தொகுதிகள் 39ல் இருந்து 32ஆக குறையலாம். கேரளாவின் தொகுதிகள் 20ல் இருந்து 15ஆகவும் குறையும். 2026 மக்கள் தொகையில் தமிழகத்தின் மக்கள் தொகை விகிதம் மேலும் குறைந்திருந்தால்.. தமிழகத்திற்கான இடம் மேலும் கூட குறையலாம்.

இதன் காரணமாகவே தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்தாண்டுக்குள் நிறைவேற்ற வேண்டி உள்ளது. இதற்கு முன்பு 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. அதை தான் அனைத்து எதிர்க்கட்சிகளுமே கடுமையாக எதிர்த்தது.

இப்போது மாறியது என்ன

ஆனால், இப்போது மத்திய அரசு நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படாது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அப்படியே 7.2% ஆக தொடரும்.

எனவே, மசோதா நிறைவேறாவிட்டால் தொகுதி மறுவரையறையே நடைபெறாது என்று இல்லை. மாறாக, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கும். இதை கருத்தில் கொண்டே என்டிஏ கூட்டணியில் இல்லாத சில கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+