கொளத்தூர் இடைத்தேர்தல்.. பிரியாவை பரிந்துரைக்கும் சேகர்பாபு.. போட்டியில் எழிலன், கார்த்திக் மோகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மேயர் பிரியாவை வேட்பாளராக கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் புரசைவாக்கம் ரங்கநாதன், சிற்றரசு, எழிலன் நாகநாதன், கார்த்திக் மோகன் ஆகியோரின் பெயர்களும் அடிபட தொடங்கி இருக்கிறது.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த விஎஸ் பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதி இடைத்தேர்தலுடன் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

Mayor Priya Sekarbabu DMK Kolathur

இதனால் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு கூடுதலாக அனுதாப அலை வீசுகிறது. அவரின் தோல்வியால் திமுகவினரும் கொஞ்சம் உடைந்து போய் இருக்கின்றனர். இதனால் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்க வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.

ஆனால் ஸ்டாலின், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்க விரும்பவில்லை. கடந்த 3 முறையும் கொளத்தூர் தொகுதிக்கு அவ்வளவு செய்த போதும், அவர்கள் கொடுத்த தோல்வியால் ஸ்டாலின் இனி அந்த தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார். இதனால் திமுக தரப்பில் யார் களமிறங்குவார்கள் என்ற விவாதம் நடந்து வருகிறது.

திமுக சார்பாக இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் புரசைவாக்கம் ரங்கநாதன் முயற்சித்து வருகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மேயர் பிரியாவை வேட்பாளராக கொண்டு வர பரிந்துரைகள் நடந்துள்ளது. கடந்த தேர்தலின் போது கொளத்தூர் தொகுதி பொறுப்பாளராக சேகர்பாபு தான் இருந்தார்.

தற்போது மறுசீரமைப்பின் போது கொளத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதியை சென்னை வடக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை மாவட்டச் செயலாளர் நியமனம் நடக்காததால், சேகர்பாபு தான் இன்னும் பொறுப்பாளராக உள்ளார். மீண்டும் சேகர்பாபு வசம் கொளத்தூர் தேர்தல் பணிகளை ஒப்படைக்க கட்சி தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கொளத்தூர் தொகுதியை வெல்ல சேகர்பாபு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மறுபக்கம் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளரான சிற்றரசு, மருத்துவர் எழிலன் நாகநாதன், சபரீசனின் நண்பர் கார்த்திக் மோகன் ஆகியோரின் பெயர்களும் கொளத்தூர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஸ்டாலின் முடிவு தான் இறுதியாக எடுபடும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+