வைகுண்ட ஏகாதசி! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவ.30-ல் சொர்க்க வாசல் தரிசன புக்கிங்!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்வதற்காக ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் திங்கள்கிழமை (நவ.30) காலை 10 மணிக்கு வெளியாகிறது. 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாசதி வரும் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வைணவ கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். டிசம்பர் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய இன்று முதல் டிக்கெட்டுகள் வெளியாகின்றன.
இன்றைய தினம் காலை 10 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அது போல் வைகுண்ட ஏகாதசிக்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் நவம்பர் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் 20, 21 ஆகிய தேதிகளில் ரூ 300 சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 20, 21 ஆகிய தேதிகளுக்கான குலுக்கல் முறையிலான டிக்கெட்டுகள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை புக் செய்யலாம்.
இதற்கான மின்னணு குலுக்கல் முடிவுகள் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். அதில் பக்தர் டிக்கெட் நம்பர், பெயர், ஆதார் எண் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். அந்த குலுக்கல் பட்டியலில் டிக்கெட் எண் இருந்தால் இலவசமாக போய் ஏழுமலையானை தரிசிக்கலாம். இல்லாவிட்டால் அடுத்த முறைதான்!


Click it and Unblock the Notifications
