நாய்கள் ஜாக்கிரதை மாதிரி.. தவெக ஜாக்கிரதை! பிணங்களின் மீது ஆட்சி நடத்தும் விஜய்! விளாசிய எச்.ராஜா!
திருச்சி: தவெக-வினர் தங்களைத் தூய சக்தி என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அத்தகையவர்கள் அல்ல. 41 நபர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஜோசப் விஜய், அந்தப் பிணங்களின் மீது ஆட்சி நடத்தி வருகிறார் எனவும், எல்லா திருடர்களும் த.வெ.க. வில் இருக்கான். அதனால் நாம் வீட்டில் 'பிவேர் ஆஃப் டாக்ஸ்'ன்னு எழுதிப் போடுவது போல், மாதிரி 'பிவேர் ஆஃப் த.வெ.க." அப்படின்னு போடணும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எச். ராஜா, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள பெண்கள் யாரும் அங்கு சென்று வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை.

எச்.ராஜா
இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு பேசி வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், 1931-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 33 சென்ட் இடம் மட்டுமே தர்காவிற்குச் சொந்தமானது.
ஜோசப் விஜய்
அங்கு செல்வதற்கான படிக்கட்டுகள் கூட இந்துக்களுக்குச் சொந்தமானவை அல்ல. அவர்களுக்கு சொந்தமாக தனிப் படிகள் கிடையாது. முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தமிழக அரசை தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டும். இவர்கள் இந்து விரோத சக்திகளாகவும், மத அடிப்படைவாதிகளாகவும் செயல்படுகின்றனர்.முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மக்கள் நம்பக் கூடாது.
இந்து கோவில்கள்
இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. இங்கு வாழ விருப்பம் இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். படையெடுப்பின் மூலம் நம் நாட்டுக்குள் நுழைந்த பாபர். அவர் நமது பகைவன். அவரை நாம் ஒருபோதும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்கள் அனைத்தையும் அரசின் பிடியிலிருந்து விடுவித்து, குன்றக்குடி அடிகளார் தலைமையில் தனித்து இயங்கும் வாரியத்தை அமைத்து அதன் வசம் ஒப்படைக்க வேண்டும்.
சிறுபான்மையினர்
சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களின் விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதில்லை. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒரு கிரிமினல். தவெக-வினர் தங்களைத் தூய சக்தி என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அத்தகையவர்கள் அல்ல. 41 நபர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஜோசப் விஜய், அந்தப் பிணங்களின் மீது ஆட்சி நடத்தி வருகிறார்.
தவெக ஜாக்கிரதை
பொய்யான வாக்குறுதிகளை அளித்துச் செயல்படும் அவரிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எல்லா திருடர்களும் த.வெ.க. வில் இருக்கான். அதனால நாம இந்த 'பிவேர் ஆஃப் டாக்ஸ்'ன்னு வீட்டுல போடுவாங்க இல்ல அது மாதிரி 'பிவேர் ஆஃப் த.வெ.க. அப்படின்னு போடணும். அந்த அளவுக்கு மிக மோசமான தீய சக்திகள் கையில தமிழ்நாடு போயிருக்கு. அது நிரூபிக்கப்பட்டிருக்கு." என்றார்.


Click it and Unblock the Notifications
