Gold Price Today: தங்கம் விலை இன்று தாறுமாறாக சரிந்தது.. நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்! ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த இரு நாட்களாக உயர்ந்து வந்த விலையில் இன்று தடாலடியாக சரிந்துள்ளது. மீன்டும் தங்கம் விலை குறைந்து சர்ப்ரைஸ் தந்துள்ளது. உச்சத்தில் இருந்து சரசரவென சரிந்த தங்கம் விலை தற்போது 93 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. வெள்ளி விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.92,320-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,540-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

ரூ.1.34 லட்சத்திற்கு விற்பனை ஆன தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என இருந்தது. ஆனால் ஒரே ஆண்டில் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது. அதே மாதம் ஒரு சவரன் வரலாற்றில் இல்லாத உச்சமாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் நகை பிரியர்கள் கலக்கமடைந்தனர்.
ஆனால் அதன் பிறகு தங்கம் விலை சற்று சரியத் தொடங்கியது. புதிய உச்சம் தொடாமல் ஒரு சவரன் ரூ.1.20 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கடந்த இரு மாதங்களாகவே தங்கம் விலை தாறுமாறாக சரிந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்திற்கு சரிந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்றைய தங்கம் விலை என்ன?
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் ஏற தொடங்கியது. நேற்று முன் தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் விலை அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.94,160 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலை இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.93,760 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
28-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,760 (இன்று)
27-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.94,160 (நேற்று)
26-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,320
25-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,360
24-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,720
23-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720
20-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,080
19-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.95,840
18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.97,720
17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.99,760
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920


Click it and Unblock the Notifications
