காங்கிரஸை கை கழுவும் சரத் பவார்! மோடி அமைச்சரவையில் இடம்? கூடவே வைத்த இன்னொரு கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு மாறுவதற்கும் சரத் பவார் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக மோடி அமைச்சரவையில் சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி, மகாராஷ்டிர அமைச்சரவையில் இரண்டு அமைச்சரவை இடங்களை தர வேண்டும் என இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுகிறது. நவம்பர் 30ஆம் தேதி லோக்சபாவும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்யசபாவும் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு தேவையான 360 இடங்களை பெறுவதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் தான் சரத் பவார் கட்சி உடனான பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

Sharad Pawar NCP Delimitation Bill NDA

சரத் பவார் வைக்கும் கண்டிஷன்

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தர சரத் பவார் தரப்பு இரு கண்டிஷன்களை முன்வைக்கிறது. முதலில் சரத் பவாரின் மகளும், கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை! தேர்தல் முறைகேடுகள் குறித்த போராட்டங்களில் சுலே முன்னணியில் இருந்தாலும் கூட கடந்த சில நாட்களாக தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு ஆதரவான கருத்துகளையே அவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மகாராஷ்டிராவில் உள்ள பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசிலும் இரண்டு அமைச்சரவை பதவிகள் வேண்டும் என சரத் பவார் கட்சி கேட்டுள்ளது. இதே கூட்டணி அரசில் தான் அரசில் அஜித் பவார் என்சிபி அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசில் சரத் பவாரின் தரப்பில் இருந்து ஜெயந்த் பாட்டீலுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என்றும், மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் மற்றொரு அமைச்சர் பதவியை பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்சியின் மூத்த எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இரண்டு இணை அமைச்சர் பதவிகளையும் அக்கட்சி கேட்பதாகத் தெரிகிறது.

முதல்வராக்க முயற்சி?

இதற்கிடையே சுப்ரியா சுலேவை மகாராஷ்டிரா முதல்வராக்கவும் கூட சரத் பவார் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகிற. இருப்பினும், இதை சுலே தரப்பே திட்டவட்டமாக மறுத்தது.. சட்டப்பேரவையில் தங்கள் கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்டிய சுலே, இந்த தகவல்களை அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியிருந்தார்.

ஏன் முக்கியம்

லோக்சபாவில் சரத் பவார் கட்சிக்கு 8 எம்பிக்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற 360 எம்பிக்கள் தேவைப்படும் சூழலில், இந்த 8 எம்பிக்கள் முக்கியமாக மாறுவார்கள். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுடன் தொடர்புடைய இந்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது. இதன் காரணமாகவே இந்த முறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து நிறைவேற்றிவிட மத்திய அரசு முயல்கிறது.

என்ன காரணம்?

அதேநேரம் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பே அதிகார பகிர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று சரத் பவார் கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்துவதாக தெரிகிறது. உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள சரத் பவார், காங்கிரஸ் தலைவர்களிடம் தொலைப்பேசியில் பேசி, தங்கள் கட்சியின் அரசியல் சூழ்நிலையையும் நிர்ப்பந்தங்களையும் விளக்கியதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது அவசியம் என்றும் அவர் இந்தியா கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+