தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி தானே அனுப்பினார்.. கொலை குற்றம் இல்லையே.. மன்சூர் அலிகான் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

கோவை: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். பெண் மாவட்ட ஆட்சியருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏ குறுஞ்செய்தி தானே அனுப்பினார். கொலை குற்றம் கிடையாது என்று மன்சூர் அலிகான் சொல்லியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கோவையில் நடிகரும், தவெக நிர்வாகியுமான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "என்ன தவெக எம்எல்ஏ விவகாரம். அவர் குறுஞ்செய்தி தானே அனுப்பியிருக்கார். காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் நுழைந்தது போல திடீரென சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். புதிது புதிதாக வந்துள்ளனர். அதனால் ஏதோ, தெரியாமல் அனுப்பிவிட்டார். ஆனால் தவறு தவறு தான்.

TVK MLA Mansoor Alikhan

கொலை குற்றம் இல்லை

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியதுதான். இல்லாவிடின் மாவட்ட ஆட்சியர் முன்பு தோப்புக்கரணம் போட வைத்திருக்கலாம். நானாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட ஆட்சியர் முன்பு சென்று தோப்புக்கரணம் போட வைத்திருப்பேன். நேரடியாக ஏப்பா, இப்படி பண்ணு என்று எம்எல்ஏவை தோப்புக்கரணம் போட வைத்திருப்பேன்.


இது சாதாரண விஷயம் தானே. பெரிய கொலை குற்றம் எல்லாம் இல்லை.


நானும் தான் தவெகவில் உள்ளேன். எனக்கு பதவி, பொறுப்பு எதுவும் இல்லை. நான் எப்படி பேச முடியும். வருகிற தேர்தலில் நான் நிச்சயமாக நிற்கலாம் என்றிருந்தேன். எல்லாம் இரண்டு இரண்டாக ரிலீஸ் செய்கிறார்கள். என்னவென்றே தெரியவில்லை. வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு, லால்குடியி நான் போட்டியிட்டது. தெரியாத்தனமாக நின்றுவிட்டேன். 2, 3 நாட்கள் இருந்து பிரச்சாரத்தை முடித்திருந்தால் கௌரவமாக ஓட்டு வாங்கியிருப்பேன்.

இடைத்தேர்தலில் போட்டியா

உடல்நிலை சரியில்லை. குடும்ப டாக்டர் அங்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். அதனால் விட்டு விட்டு, பெரியகட்சிக்கு ஆதரவு வழங்கி சென்றுவிட்டேன். அது மிகப்பெரிய தவறு. அதனாலேயே நான் இடைத்தேர்தலில் நிற்கலாம். 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட முதலமைச்சரை சந்தித்து வாய்ப்பு கேட்பேன். என்னுடைய வேலை இருக்கிறது. எங்கள் விளையாட்டு அகாடமியை பெரிதாக வளர்ப்பேன். மக்கள் ஆதரவுடன் போட்டியிடுவேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+