திருப்பரங்குன்றம் மலையை கட்டுப்பாட்டில் எடுத்த CRPF! தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மலை பகுதி முழுவதையும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். அது போல் சிக்கந்தர் தர்காவிலும் மாநகர போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இன்று தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மலை முழுவதையும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளது.

thirupparankundram crpf

இதையடுத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் 105ஆவது படைபிரிவான பட்டாலியன் வீரர்கள் 130 பேர் கமாண்டன்ட் சுனில்குமார் தலைமையில் கோவையில் இருந்து நேற்று இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் வந்தனர். சுமார் 3 பேருந்துகளில் வந்த அவர்கள் தனக்கன்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று தீபம் ஏற்றும் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோயில், மலைப்பகுதி, தீபத்தூண் , சிக்கந்தர் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 ஆண் அதிகாரிகளும் ஒரு பெண் அதிகாரியும் இந்த குழுவை வழிநடத்தவுள்ளனர்.

மேலும் கூடுதலாக சென்னை, பெங்களூர் பகுதிகளில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களும் மலை பகுதியில் விளக்கேற்றலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் காலை முதலே பக்தர்கள் மலை பகுதியில் குவிய தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அது போல் சிக்கந்தர் தர்காவுக்கு இஸ்லாமியர்கள் செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+