ரொம்ப அருமையா இருக்கு.. அதானியின் ‘காவ்தா' தளத்தை வியந்து பாராட்டிய பாடகர் தில்ஜித் தோசாஞ்ச்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அதானியின் 'காவ்தா' புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை பிரபல பாடகரான தில்ஜித் தோசாஞ்ச் நேரில் பார்வையிட்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் உற்பத்தி, காற்றாலை மின்உற்பத்தி திட்டங்களை பார்வையிட்டு வியந்து போன அவர் மிகவும் அருமையாக 'காவ்தா' தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.

diljit-dosanjh-visites-and-praises-adanis-khavda-renewable-energy-project

அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தால் குஜராத்தில் 'காவ்தா' தளம் இயங்கி வருகிறது. குஜராத்தின் கட்ச் பகுதியில்538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த தளம் அமைந்துள்ளது.

இங்கு புதுப்பிக்கத்தக்க கூடிய ஆற்றலை உருவாக்கும் சூரியசக்தி மற்றும் காற்றாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 30 ஜிகாவாட் சூரிய சக்தி ஆற்றல் (Solar) மற்றும் 4 ஜிகாவாட் காற்றாலை (Wind) மின்சாரம் உற்பத்தியாகிறது. கூடுதலாக 6.63 ஜிகாவாட்-மணி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒற்றை பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தையும் (BESS) கொண்டுள்ளது.

இந்த 'காவ்தா தளம் என்பது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமின்றி மின் உற்பத்தி திறனுக்கும் வலு சேர்த்து வருகிறது. இங்கிருந்து மில்லியன் கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதன் நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்ககூடிய ஆற்றல் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் காவ்தா தளத்தை பார்வையிட்டார். நம் நாட்டில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார். குஜராத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் இந்த இடத்தை பார்வையிட்டார்.

அதோடு தளவாடம் மற்றும் பொறியியல் சவால்களை புரிந்துகொள்வதற்காக அவர் பணியாற்றும் இன்ஜினியர்களுடன் பேசினார் முக்கிய விஷயங்களை கேட்டறிந்தார். பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் செயல்பட்டு வரும்அதானி பசுமை போராளிகளை பாராட்டினார்.

காவ்தா தளத்தில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பரந்து விரிந்து காணப்பட்ட சோலார் பேனல்களை ரசித்தார். வானுயர்ந்த காற்றாலைகளையும் பார்த்து வியந்தார். அப்போது அவர் காவ்தா தளம் பற்றி, '' மிகவும் அருமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது'' என்று வியப்புடன் கூறினார்.

மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பது எப்படி? என்பது பற்றி அறிந்து கொண்டார். தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

இந்த சமயத்தில் கட்ச் பகுதியின் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அப்பகுதியின் புகழ்பெற்ற பாரம்பரியக் கலை வடிவமான ரோகன் கலையையும், அஜ்ரக் அச்சிடப்பட்ட ஒரு சால்வையையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

30 ஜிகாவாட் திறன் கொண்ட காவ்தா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம், ஜிகாவாட் அளவிலான செயல்பாட்டிற்கான ஒரு உலகளாவிய முன்மாதிரியாக மாறியுள்ளது. இதில் 11 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டதும், 26 ஜிகாவாட் சூரிய ஆற்றலையும் 4 ஜிகாவாட் காற்றாலை ஆற்றலையும் உருவாக்க உள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தில், உலகின் மிகப்பெரிய ஒரே இடத்தில் அமைந்த Battery Energy Storage System - BESS) உள்ளது. இதன் கொள்ளளவு 6.63 GWh ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த செயல்பாட்டு BESS கொள்ளளவை ஒப்பிடும்போது 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். இது தடையற்ற, 24 மணிநேர பசுமை ஆற்றலை வழங்கவும், மின் கட்டமைப்பு (grid) நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. இந்தத் திட்டத்தில், எதிர்காலத்தில் மொத்தம் 50 GWh அளவிலான பேட்டரி ஆற்றல் சேமிப்பு வசதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 15,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரை போல் ஐந்து மடங்கு பரப்பளவு கொண்ட இந்த திட்டம், முழுமையாக நிறைவடைந்த பிறகு விண்வெளியில் இருந்து பார்த்தாலும் நன்றாக தெரியும். ஏனென்றால் இந்த திட்டம் அவ்வளவு பிரமாண்டமானது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இந்த 'காவ்டா' தளம், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ள அதானி குழுமத்தின் முக்கிய திட்டமாகும். தரிசு நிலமாக இருந்த இந்தப் பகுதியை, எரிசக்தி மாற்றத்தின் மையப்புள்ளியாக இந்தத் திட்டம் மாற்றியுள்ளது.

இது ஆண்டுதோறும் 17 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும். 2029ம் ஆண்டிற்குள், அனைத்து வகையான எரிசக்தி ஆதாரங்களையும் உள்ளடக்கி உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக 'காவ்டா' மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விரைவான வளர்ச்சி, 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்கள் மூலம் 500 GW மின் உற்பத்தித் திறனை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை அடைவதில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ள இலக்கை நிறைவேற்ற உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+