தமிழகத்துக்கு குட்நியூஸ்.. 50% வரை லோக்சபா தொகுதிகள் உயர்வு! தொகுதி மறுவரை மசோதாவில் முன்மொழிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்வதற்கான மசோதா தொடர்பான சாரம்சத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் தற்போது உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delimitation Bill

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் அதிகரிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.

இதையடுத்து மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் வரும் நவம்பர் 30ம் தேதி நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு திமுக உள்பட பிற எதிர்க்கட்சிகளிடம் பாஜக ஆதரவு கோரி உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப பெறப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் தலா 50 சதவீத அடிப்படையில் லோக்சபா எண்ணிக்கையை உயர்த்துவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. தற்போது 3 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளது. ஒன்று 132வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா. இன்னொன்று தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, 3வது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா 2026 கொண்டு வரப்பட உள்ளது.

இதில் தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 (Delimitation (Second) Bill 2026) என்பது முந்தைய தொகுதி மறுவரையறை (முதலாவது) மசோதா 2026 வில் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த புதிய மசோதா கொண்டு வரப்படுகிறது. என்னென்ன மாற்றங்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:

அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை செய்யப்போவது இல்லை. மாறாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் 50 சதவீதம் வரை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 550ல் இருந்து 850 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. '' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் தற்போதுள்ள 39 நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும். அதேபோல் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+