கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைதானபோது முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் அதிகாரியான பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று மாலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இந்த சமயத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் சென்னையில் என்ன செய்தார்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Kallakurichi MLA

கடந்த 23ம் தேதி பெண் கலெக்டர் அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து 4 நாட்கள் ஆகிய நிலையில் இன்று கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை அதிகாரியாக இருக்கும் திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் கைது நடவடிக்கையை மேற்கொண்டார். தற்போது கள்ளக்குறிச்சி விருந்தினர் மாளிகையில் அருள் விக்னேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கைது நடவடிக்கை இன்று மாலை சுமார் 6 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. இது தவெகவிற்கு பின்னடைவவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அருள் விக்னேஷ், பெண் கலெக்டருக்கு மெசேஜ் எதுவும் அனுப்பவில்லை என்று தவெகவினர் கூறி வந்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் தான் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது நடவடிக்கையின்போது முதல்வர் விஜய் என்ன செய்தார்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த சமயத்தில் முதல்வர் விஜய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பாமினி இல்லத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த ஆலோசனை என்பது தமிழக சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை மையப்படுத்தி இருந்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த தீபம் என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் ஏற்றப்பட வேண்டும். பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎஃப் வசம் ஒப்படைத்தது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது. இருப்பினும் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் குவிய வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றம் சொன்னதுபடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு இருந்தாலும் கூட இது மிகவும் சென்சிட்டவான விஷயமாகும். இதனால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும், உஷாராக அதிகாரிகள் இருக்கும்படி போலீசாருக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்பட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+