"நீங்க கைது பண்ணல.. நாங்க பண்ண வெச்சோம்.." - TVK MLA அருள் விக்னேஷ் கைது பற்றி எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீங்க கைது பண்ணல... நாங்க கைது பண்ண வெச்சோம்!" என தவெக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான அருள் விக்னேஷ், கடந்த ஜூலை மாதம் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்து வந்தன.

Edappadi Palaniswami

உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அருள் விக்னேஷ் கைது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!

முதல்வர் விஜய்,
Just a Reminder-
நீங்க கைது பண்ணல...
நாங்க கைது பண்ண வெச்சோம் !!

இந்த வழக்கில், "அப்படி ஒன்று நடக்கவே இல்லை" என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!

இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+