தவெக பெண் எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்று சந்தித்த அமைச்சர்கள்!
ஈரோடு: பவானிசாகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வி, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், சரத்குமார், கமலி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் தவெகவினர் இடையே பரவி வருகிறது. என்ன பிரச்சனைக்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்ட 13 பெண் வேட்பாளர்கள் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் தவெகவின் தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றார்.
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, முதுகலை பட்டம் பெற்றவர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ் பியூட்டி சலூன் என்கிற பெயரில் அழகு நிலையம் ஒன்றை சத்தியமங்கலத்தில் நடத்தி வருகிறார். தொடர்ந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்ச்செல்வியின் தந்தை அந்தியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பின்னணி கொண்ட தமிழ்ச்செல்வி, விஜய்யின் தவெகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், பவானிசாகர் தொகுதியில் போட்டியிட சீட் பெற்று எம்.எல்.ஏ ஆனார்.


Click it and Unblock the Notifications
