திருப்பரங்குன்றம் விவகாரத்தால் உ.பி தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவா? பாஜக கையில் எடுத்த ஆயுதம்!
டெல்லி: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தவெக அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை குறிவைத்து அட்டாக் செய்து வருகிறது பாஜக. விரைவில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், 'இந்து விரோத காங்கிரஸ்' என்ற முழக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளது பாஜக.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற கடந்த நவம்பர் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபநாளில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு
நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மீறியதாக கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 28 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சி கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதுடன், கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், பாதுகாப்புப் பணிகளை CRPF வசம் ஒப்படைத்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனைத் தமது பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் பாஜக, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி அம்புகளை வீசியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை குறி வைத்து
2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி - காங்கிரஸும் இணைந்து கணிசமான வெற்றியைப் பெற்றன. இதனால், இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்துதே பாஜகவின் முக்கியமான இலக்காக உள்ளது. இந்தச் சூழலில், 'காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி' என்ற பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்தால், அது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக மாறும் என பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
பாஜக பிளான்
இந்த பிளானில் தான், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி என்ற அளவில் மட்டும் நிறுத்தாமல், காங்கிரஸ் கட்சியையை அட்டாக் செய்வதற்கான ஆயுதமாக பாஜக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குறிவைத்து பாஜக, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் விவகாரத்தை, தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாகத் தெரிகிறது.
Tamil Nadu CM Vijay and his ally Rahul Gandhi, your “secular” alliance just got exposed by the highest court in the land! #KarthigaiDeepamWhen 87% of Hindus need the CRPF just to light one traditional lamp at Thiruparankundram’s Deepathoon, you know the state has completely failed its majority.- Hindu devotees blocked- Court orders openly defied- Temple trustees suspended- Contempt notices flying- Supreme Court forced to step in and hand over security to CRPFOn 28 November, the Deepathoon will finally be lit, not because of Vijay or Rahul, but despite them. This is what minority appeasement and vote-bank politics look like.Jai Shri Murugan! #MuruganukkuArohara
— BJP (@BJP4India) November 27, 2026
காங்கிரஸ் டார்கெட்
பாஜக வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றில், திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, "காங்கிரஸ் - தவெக அரசுக்கு வெட்கக்கேடு" என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், "87% இந்துக்கள் இன்னும் ஒரு தீபம் ஏற்றுவதற்குக்கூட CRPF தேவைப்படும் நிலையில் உள்ளனர்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், திருப்பரங்குன்றத்தில் இந்து பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை மாநில அரசு மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஜக பிரச்சார ஆயுதம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பாஜக தனது பிரசாரத்திற்கான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் இயங்கும் தவெக அரசை, இந்துக்களுக்கு எதிரான அரசாக விமர்சித்து, காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது பாஜக.
தமிழகத்தில், இந்த விவகாரத்தில், தவெக அரசையே எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், பாஜகவின் அகில இந்திய சமூக ஊடகப் பக்கம், காங்கிரஸ் கட்சியையும் இதில் சேர்த்து டேமேஜ் செய்துள்ளது. இதன் மூலம், உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 'இந்து விரோத கட்சி' என்ற பிரச்சாரத்தை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது பாஜக.
𝐒𝐚𝐦𝐞 𝐩𝐚𝐫𝐭𝐲, 𝐬𝐚𝐦𝐞 𝐡𝐨𝐬𝐭𝐢𝐥𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐇𝐢𝐧𝐝𝐮 𝐟𝐚𝐢𝐭𝐡.December 2025: Congress went after the judge. November 2026: Congress backs the blockade. #KarthigaiDeepam #MuruganukkuArohara https://t.co/dchG7Tgnur
— BJP (@BJP4India) November 27, 2026
காங்கிரஸ் நிலைப்பாட்டை விமர்சிக்கும் பாஜக
காங்கிரஸ் கட்சி தீபத்தை வெறுக்கிறது என்ற தலைப்பிலும் போஸ்டரை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது பாஜக. அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர்.
டிசம்பர் 2025: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 2026: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய தவெக அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்பதாக பாஜக குற்றம்சாட்டி இருக்கிறது.
பாஜகவின் அட்டாக்
அன்றைக்கு, தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராகச் செயல்பட்டீர்கள்.. இப்போது தீபம் ஏற்றுவதைத் தடுத்த தவெக அரசுக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். மொத்தத்தில், இந்து விரோதப் போக்கில் காங்கிரஸ் கட்சியிடம் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் பாஜக திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை நோக்கிச் செய்யும் அரசியல் அட்டாக். இது காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
