அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறை? முழு லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு எந்த தேதியில் தொடங்கி எப்போது முடியும்? விடுமுறை நாட்கள் எத்தனை? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

haly-yearly-exam-time-table-2026-release-how-many-days-students-gets-leave-tamil-nadu-government-a

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2026 ம் ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது. 6 முதல் 9 ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு டிசம்பர் 15ம் தேதியில் தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23ல் முடிவடைகிறது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் 16ம் தேதியில் தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்பிறகு டிசம்பர் 24ம் தேதி முதல் 2027 ஜனவரி 3ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்பிறகு ஜனவரி 4ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+