சிறையிலேயே இருங்க.. கைதான தவெக எம்எல்ஏவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்! கடலூர் ஜெயிலில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கலெக்டராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்று மாலையில் கைதானார். நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அருள் விக்னேஷ் சாலை மார்க்கமாக கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் சிறைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்கின்றனர்.

14-days-judicial-custody-for-kallakurichi-tvk-mla-arul-vignesh-who-arrested-after-sending-message-to

மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் சென்றது.

உயர்நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தான் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 23ம் தேதி பெண் கலெக்டர் அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று மாலையில் அருள் விக்னேஷ் எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள வீட்டில் வைத்து வழக்கின் விசாரணை அதிகாரியாக இருக்கும் திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் அவரை கைது செய்தார். அதன்பிறகு அவரை கள்ளக்குறிச்சி விருந்தினர் மாளிகையில் வைத்து சுமார் ஐந்தரை மணிநேரம் விசாரித்தார்.

பிறகு அவர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 45 நிமிடங்கள் வரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் பானுமதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அருள் விக்னேசை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை நீதித்துறை நடுவர் இல்லத்தில் இருந்து வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அழைத்து சென்றனர். அருள் விக்னேசை கடலூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் முடிவெடுத்தனர். இதையடுத்து சாலை மார்க்கமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருள் விக்னேஷ் எம்எல்ஏ கடலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+