சர்ச்சில் ஐயப்பன் பாடல்.. மேடையேறி கீபோர்ட்டை தட்டிய நபரை விரட்டியடித்து கிறிஸ்தவர்கள் செய்த சம்பவம்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இப்போது மத ரீதியாக மக்கள் மனதில் வெறுப்பை உருவாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆனால் மக்கள் உஷாராக மதம் கடந்து மதநல்லிணக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக இப்போது கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் சர்ச் ஒன்றின் ஆண்டுவிழாவில் இசைக்குழுவினர் ஐயப்பா சாமி பாடல் பாடியபோது அங்கிருந்த ஒருவர் மேடை ஏறி எதிர்ப்பு தெரிவித்து 'கீபோர்ட்டை' தள்ளிவிட்டு தகராறு செய்த நிலையில் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அந்த நபரை அப்புறப்படுத்தி ஐயப்பா சாமியின் பல்வேறு பாடல்களை பாடச்சொல்லி ரசித்து மதநல்லிணக்கத்திற்கு உதாரணமான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

kerala church ayappa song

கேரளாவில் உள்ள ஒரு கத்தோலிக்கத் திருச்சபையின் ஆண்டு திருவிழாவின் போது, இந்து பக்திப் பாடல் ஒன்று பாடப்பட்டதை நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி, பாடலை நிறுத்தச் சொன்னார். ஆனால், அந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகத் தலையிட்டு, இடையூறு செய்த நபரை அங்கிருந்து அகற்றினர். மேலும், ஐயப்ப சுவாமி குறித்த கூடுதல் பாடல்களைப் பாடுமாறு இசைக்குழுவை ஊக்குவித்தனர்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கிழப்பறையார் என்ற கிராமத்தில் புனித கிரிகோரியோஸ் என்ற சர்ச் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த சர்ச்சில் கடந்த 22ம் தேி ஆண்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்காக ஆலப்புழாவைச் சேர்ந்த 'ரெய்ன்பான்' எனும் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி இரண்டரை மணிநேரம் நடந்தது. இசைக்குழுவினர் மேடையில் கிறிஸ்தவ பாடல்கள், மலையாள சினிமா பாடல்கள் பாடினர். நிகழ்ச்சியில் இறுதியில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்த சிலர் இசைக்குழுவினரிடம் ஐயப்பா சாமி பாடல்களை பாடும்படி கேட்டு கொண்டனர்.

இதையடுத்து இசைக்குழுவின் மேலாளரும் முதன்மை பாடகருமான கேஎம் ரஷீத் புகழ்பெற்ற ஐயப்ப சாமி பாடலான 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' என்ற பாடலை பாடினார். அப்போது ஒருவர் விறுவிறுவென மேடைக்கு ஏறி சர்ச் வளாகத்தில் இந்து பாடல் பாடக்கூடாது என்று கூறி அங்கிருந்த கீபோர்டை தட்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

இதையடுத்து உடனடியாக சர்ச்சை சேர்ந்தவர்கள் தலையீடு செ்தனர். பிரச்சனை செய்த நபரை மேடையில் இருந்து இறக்கிவிட்டவர்கள் இசைக்குழுவினரை ஐயப்ப சாமி பாடல்கள் பாடச்சொல்லி ரசித்தனர். ஒருபாடல் மட்டுமின்றி இன்னும் சில இந்து பக்தி பாடல்களை பாடச்சொல்லி கேட்டு ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதுபற்றி இசைக்குழுவின் மேலாளர் ரஷீத் கூறுகையில், ''எனது 30 ஆண்டுகால இசை வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்து இல்லை. இந்த சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் சர்ச்சை சேர்ந்த பிற மக்கள் பிரச்சனை செய்த நபரை மேடையில் இருந்து இறக்கவிட்டு மீண்டும் ஐயப்ப சாமி பாடல்களை பாடச்சொல்லி ரசித்தனர்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+