மக்களே குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு மழை
இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்தியக் கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கா்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதையில் காற்று இடையூறால், சனிக்கிழமை (நவம்பர் 28) நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை
ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று (நவம்பர் 28) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
