காசி தமிழ்ச் சங்கமம் 5.0: வாரணாசியில் இன்று தொடங்கிவைக்கிறார் சிபி ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு - காசி இடையேயான பழைமையான பண்பாடு, கலாசாரம், மொழி, நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காசி தமிழ்ச் சங்க விழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் வாரணாசியில் 5 ஆவது காசி தமிழ்ச் சங்கமம் விழாவை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைக்கவுள்ளார்.

காசி தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று வாரணாசியில் தொடங்கி வைக்கவுள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா்.

Kashi Tamil Sangamam CP Radhakrishnan Varanasi Thirukkural Tamil Culture Tamil Nadu Uttar Pradesh Rajnath Singh

காசி தமிழ்ச் சங்கம் விழா 5.0

காசி தமிழ்ச் சங்கம் விழா கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பாரம்பரியத் தலங்களுக்கு 8 நாட்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படடது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாமாண்டு விழாவில் முனிவா் அகத்தியரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் ஆண்டில் 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளுடன் இந்த விழா நடைபெற்றது. நடப்பு ஆண்டில், 'திருக்குறள் பயில்வோம்' என்ற கருப்பொருளுடன் வாரணாசியில் 5வது காசி தமிழ் சங்கமம் விழா நடைபெறுள்ளது.

1400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்த விழாவில், தமிழகத்தில் இருந்து 1400க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். 7 குழுக்களாகப் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இடம்பெறுவார்கள். இந்த விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், வேளாண் துறை நிபுணா்கள், கலைஞா்கள், பெண்கள், ஆன்மிகவாதிகள் பங்கேற்கவுள்ளனா்.

8 நாட்கள் இவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் 4 நாட்கள் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகளிலும், நான்கு நாட்கள் பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சாரநாத், ராம்நகர் கோட்டை, பாரத மாதா கோயில் ஆகிய இடங்களைப் பார்வையிடவுள்ளனர். கங்கை ஆரத்தி, நீராடுதல், கல்வி சார்ந்த கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்

22 மொழிகளில் திருக்குறள்

தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் உத்தரப்பிரதேசம் சென்று அங்குள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிக்கவுள்ளனர். திருக்குறளின் 1330 குறள்களும் 22 இந்திய மொழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்படவுள்ளன. இந்த விழாவை மத்திய உயா் கல்வி அமைச்சகம், ஐஐடி சென்னை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மத்திய செம்மொழி நிறுவனம் - சென்னை, தமிழ்நாடு அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு, மத்திய கலாசார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து நடத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+