கேரள நகைக் கடையில் துப்பாக்கி, கத்தியை காட்டி!20 பவுன் கொள்ளை! விடாமல் துரத்திய பெண் ஊழியர்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நகைக்கடையில், துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட காரில் வந்த கொள்ளையர்கள் பொள்ளாச்சிக்கு தப்பியதாக தகவல்கள் கிடைத்தன.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பெரிங்கோட்டுக்குறிச்சியில் உள்ள 'இஷான் கோல்ட்' என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் கடையின் உரிமையாளர் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார்.

Palakkad crime

அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் அந்த கடைக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு பெண் ஊழியர்கள் இருந்தனர். அந்த 3 பேரும் நகைகளை வாங்குவது போல் வந்தனர்.

தங்கமோதிரம்

மோதிரம் வாங்க வேண்டும் என கூறியதால் ஊழியரும் கம்மலை காட்டினார். சம்பந்தமே இல்லாமல் பெண் ஊழியரிடம் அவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களது நடவடிக்கையில் அந்த பெண் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடை மேலாளரை வரவழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த 3 பேரும் திடீரென துப்பாக்கியையும் கத்தியையும் எடுத்து ஊழியர்களை மிரட்டினர்.

Palakkad crime

இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் கடையில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை அப்படியே பாக்ஸுடன் அள்ளின. நகைகளுடன் தப்ப முயன்ற போது அந்த கடையின் பெண் ஊழியர்கள் துரத்தியபடியே கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிக்க ஒரு முறை துப்பாக்கியால் சுட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

மின்னல் வேகத்தில் தப்பிய கொள்ளையன்

இதையடுத்து நகைகளுடன், வந்த காரிலேயே அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். தகவலறிந்த கொட்டாயி போலீஸார் வந்து விசாரணையில் இறங்கினர். கொள்ளையர்கள் அனைவரும் இந்தி மொழி பேசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Palakkad crime

மேலும், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு அக்கும்பல் திருச்சூர் மாவட்டத்தின் திருவில்வாமலை பகுதியை நோக்கித் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைக் கைப்பற்றிய தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக- கேரள எல்லை

மேலும் அந்த கடையானது கேரளா- தமிழக எல்லையில் அமைந்துள்ளதால் தமிழகத்திற்கு தப்பிச் செல்லாமல் இருக்க எல்லை பகுதிகளில் தீவிர சோதனை செய்யப்பட்டது. அது போல் மாவட்ட எல்லைகளில் வாகனத் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களைப் பிடிக்கவும் நகைகளை மீட்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம் வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்றது கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது.

Palakkad crime

கோவையில் தஞ்சம்

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மண்ணூர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கேமராக்களை தமிழக போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்து வருகிறார்கள். கடையில் பெண் ஊழியர்கள் இருந்ததால் எளிதாக ஏமாற்றிவிடலாம் என நினைத்தனர். ஒரு வேளை கடை ஊழியருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழாதிருந்தால் இன்னும் நிறைய நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Palakkad crime

பெண் ஊழியர்

கொள்ளையை தடுக்க அங்கிருந்த பெண் ஊழியர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஒரு பெண் அவர் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி திருடர்களை அடிக்க பாய்ந்தார். கொள்ளையர்கள் பின்னாடியே பெண் ஊழியர் ஒருவர் துரத்தினார், ஆனாலும் அவரால் நகைகளை மீட்கமுடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+