அருள் விக்னேஷை கைது செய்தாச்சு.. முதல்வர் விஜய்க்கு என்ன தண்டனை?.. தினகரன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதலமைச்சர் உட்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மூடி மறைக்க முயன்று, அவ்விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அவரைப் பாதுகாத்துத் தப்பிக்க வைக்கவோ, நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தவோ முடியாமல் வேறு வழியின்றி, கைது செய்திருக்கிறது இந்த கொடுங்கோல் தவெக அரசு.

ttv dhinakaran arul vignesh vijay

மூடி மறைக்க முயற்சி

மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவருக்குத் தாங்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது குற்றம் என்றால், அத்தகைய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டே, அதனை மூடி மறைக்க முயன்றவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தான்!

முதல்வரும் தண்டிக்கப்பட வேண்டும்

கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரை மறைத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் தலைமைச் செயலாளர்; புகார் அளித்தால்தான் விசாரிக்க முடியும் என்ற நிலையில் அலட்சியத்தோடு செயல்பட்ட காவல்துறைத் தலைவர்; இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது ஒரு வதந்தி (Rumour) என்று இக்குற்றத்தை திசைதிருப்ப முயன்ற சட்டத்தையே மதிக்காத சட்டத்துறை அமைச்சர்; இவை அனைத்திற்கும் மேலாக, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரைக் கண்டும் காணாதது போல கள்ளமௌனம் காத்த முதலமைச்சர் என, இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு, புகாரை மூடி மறைந்து காப்பாற்ற முயன்ற அனைவருமே சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதுதான் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.

முதல்வருக்கு நேரம் நெருங்கிவிட்டது

சாதாரணக் குடிமகன் தவறு செய்தால் உடனடியாகப் பாயும் சட்டம், ஆளுங்கட்சியின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களிடம் மட்டும் செயலிழந்துவிடுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது Rule of Law-ஆ, அல்லது Rule of Ruling Party-ஆ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு"

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு உணர்த்தும் நியதி போல, ஆட்சிமுறை தவறி, விளைவுகளை ஆராயாமல் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தனது செல்வத்தையும், குடிமக்களையும் ஒரே நேரத்தில் இழப்பான். அத்தகைய நிலையைத் தவெக அரசும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+