விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்.. தீபம் ஏற்ற ஏற்பாடு தீவிரம்.. முன்னாள் நீதிபதிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்றப்படவுள்ளது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகிறார்கள். தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது

திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும், தீபம் ஏற்ற கூடாது என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக, தவெக இரண்டு ஆட்சிகளிலும் இது நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நிதிமன்றம் சென்றது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.

Thiruparankundram Deepam

திருப்பரங்குன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆனால் கார்த்திகை தீபத்தன்று வழக்கமான தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தீபத்தூணை சுற்றி பெரிய மேடை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக காலையிலேயே மூங்கில் கட்டைகள், மரப்பலகைகள், கயிறு உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை பக்தர்கள் மூலம் மலைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். கோயில் செல்ல இந்து பக்தர்களும், சிக்கந்தர் தர்கா செல்ல இஸ்லாமிய பக்தர்னுளும் குவிந்துள்ளனர்.

தீபம் ஏற்ற தீவிர ஏற்பாடு

ஆதார் கார்டுகள் மூலம் பக்தர்கள் விபரங்கள் பதிவு செய்த பிறகே மலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பரங்குன்றம் முழுவதும் வண்ண விளக்குகள், மின் விளக்குகள் விழா கோலம் பூண்டுள்ளது. தற்போது வரை சிஆர்பிஎப்பின் 1 கம்பெனி திருப்பரங்குன்றம் சென்றுள்ளனர். விரைவில் 750 சிஆர்பிஎப் வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களை மலர் தூவி வரவேற்க கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மலை, அடிவாரம் சுற்றி காவல்துறையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையில் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிர்வாக பொறுப்பை ஏற்கவுள்ளனர். இதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கோயிலுக்கு சென்று பார்ப்போம். இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக படித்துவிட்டு முடிவு எடுக்கப்படும். அதற்குண்டான உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+