கள்ளக்குறிச்சி விவகாரம்... உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா.. உயர்நீதிமன்றம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.தி.மு.க. தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ நேற்று காலை, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் ஆஜராகி, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டிக் கொடுத்தார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது" என்று கேள்வி எழுப்பினார். அப்போது நீதிபதி அளித்த பதிலை பார்ப்போம்.

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அ.தி.மு.க. பெண் வக்கீல் ஆர்.திரிசூலி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கை விசாரணை அதிகாரியாகவும், ஐ.ஜி. காமினியை விசாரணையை கண்காணிக்கும் அதிகாரியாகவும் நியமித்தார். ஆபாச குறுஞ்செய்தி வழக்கு விவரங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Udhayanidhi stalin Kallakurichi

தமிழக அரசு முறையீடு

இந்தச்சூழலில் தான், மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஜான் சத்யன்

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை கூறினார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக முறையிட்டார்.

உதயநிதி மீது நடவடிக்கை

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன் , எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி கூறினார்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வக்கீல்களை தவிர வேறு யாரையும் கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. சுமார் அரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின், வழக்கை வருகிற டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக வழக்கறிஞர் கேள்வி

முன்னதாக காலையில் இந்த வழக்கு விசாரணையின்போது, தி.மு.க. தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது" என்றார். அதற்கு நீதிபதி, "மாநில குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், இதுகுறித்து என்னிடம் முறையிட்டார். அப்போது, நான் (நீதிபதி) பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கும்படி கருத்து கூறினேன். சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. ஆனால், அந்த பெண்ணின் பெயர், பதவி என்று அனைத்து விவரங்களையும் எல்லோரும் பொதுவெளியில் பேசுகிறீர்கள்" என்றார்.

சிபிஐ விசாரணை

பின்னர், இந்த வழக்கில் நீங்கள் ஆஜராகி உள்ளீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.. அதற்கு மூத்த வக்கீல் இளங்கோ, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. மனு தாக்கல் செய்துள்ளார். அது விசாரணைக்கு வரும்போது ஆஜராவேன் என்று கூறினார். உடனே நீதிபதி வி.லட்சுமிநாராயணன் , "சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் சென்னையில் சி.பி.ஐ. போலீஸ் நிலையம் தொடங்க வேண்டும். நேற்று முன்தினம் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 4 வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்நாடு போலீசார் திறமையானவர்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+