மக்கள் எல்லோருமே ஹேப்பி அண்ணாச்சி! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! மகிழ்ச்சி பொங்கப் பேசிய தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தவெக ஆட்சி அமைத்த ஆறு மாதத்திற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்சநீதிமன்றதால் கடுமையான கண்டனம், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத சூழ்நிலை என மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நிகழ்வில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநாருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Tamilisai Soundararajan Vijay BJP

அப்போது பேசிய அவர்," திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நிகழ்வில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். லட்சக்கணக்கான தொண்டர்களோடு தீபம் ஏற்றுவதை பார்ப்பதற்காகவும் தீபத்தை வணங்குவதற்காகவும் செல்கிறோம்.

தமிழிசை சௌந்தரராஜன்

நேற்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது. ஆட்சி அமைத்த ஆறு மாதத்திற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்சநீதிமன்றதால் கடுமையான கண்டனம், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத சூழ்நிலை இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு. நேற்று நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக அரசு பிரபலம் அடைந்து விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதற்காக எல்லாவற்றிற்கும் மேலாக தடுக்க நினைத்த தீபம் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட இருக்கிறது. நாடு முழுவதும் மட்டுமன்றி இதனை எவ்வளவு தடுத்தார்கள் என்றால் ஏன் தடுத்தார்கள் என்று உலக தொலைக்காட்சிகள் உற்று நோக்குகின்றன நாடு முழுவதும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் முருகன் அருள் பெரியது.. வலியது. இதனை தடுக்க நினைத்த ஆட்சியின் அதிகாரம் நிச்சயமாக கண்டனத்திற்கு உரியது.

திருப்பரங்குன்றம்

சிறுபான்மையினர் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. தர்கா இருப்பதால்தான் திருப்பரங்குன்றம் முருகனும் ஒன்றாக அனைவரும் வழிபட்டு கொண்டிருக்கிறது. நாட்டில் மத வேற்றுமை ஏற்படுத்துவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, தவெக கட்சிகள் தான். உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு மூலமாக
நேற்று முதல் ஒரே கொண்டாட்டமாக தான் உள்ளது.

முதல்வர் விஜய்

திருச்செந்தூர் முருகனுக்கு வேல் எடுத்த முதல்வர் விஜய் அனைத்து மதத்தும் பொதுவானவர் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். அது தவிடு பொடி ஆகிவிட்டது. பாலியல் குற்றத்திற்கு ஒருபோதும் இந்த விஜய் ஒப்புக் கொள்ளமாட்டார் என்கின்ற இமேஜை உடைந்துவிட்டது. உங்களுடைய பேச்சு பொய் என்பது உண்மையாகிவிட்டது. காசி தமிழ் சங்கம், திருக்குறள் படிப்போம் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அதைவிட தமிழுக்கு யாரென்ன புகழ் சேர்க்க முடியும்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட இருக்கிறது. தொகுதி மறு வரை பெண்களுக்கு 33 சதவீதம் நிறைவேற்றப்பட இருக்கிறது. பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் என்றால் அனைத்துக் கட்சியும் இந்த தொகுதி மறு வரையறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் தொகுதியின் எண்ணிக்கை 39 இருப்பது 59 ஆக மாறுவது அதிக முக்கியத்துவம். அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கப் போகிறது. தொகுதி மறு வரை ஆதரவளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி

சட்டமன்ற உறுப்பினர் தவறை கண்டுபிடிக்க 5 மாதம் ஆகி உள்ளது. செஞ்சி சிறுமி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த அரசை எவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளது நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிரிவினை அரசியல் மத அரசியல் என்று பாஜகவில் குற்றப்பட்ட மக்களை கிழித்தெரியப்பட்டுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+