டிஆர்பிக்காக இதெல்லாம் தேவையா? இச்.. இச் சத்தத்தோடு உதட்டு முத்தம்! பிக் பாஸின் தந்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை வாக்குவாதம், காதல், பிரிவு, அழுகை என எல்லாமே இருக்கத்தான் செய்யும். அதுதான் அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள், தொடர்ந்து பார்க்க வைக்கிறது. ஆனால் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரை செல்லலாம்? என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக நேற்று பேமிலி ரவுண்டில் ஜேசன் அவருடைய மனைவியிடம் நடந்து கொண்டது முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Bigg Boss Tamil Jason Vijay TV

பிக் பாஸ் ஃபேமிலி ரவுண்டு

ஒவ்வொரு சீசனிலும் ஃபேமிலி ரவுண்டு நிகழ்ச்சி என்றாலே செண்டிமெண்ட்டும், அழுகை காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருவருக்கும். ஆனால் இந்த முறையை ஃபேமிலி ரவுண்டு வரும்போது அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்த்தது ஜேசன் பேமிலி, டிடிஎஃப் வாசன் பேமிலி மற்றும் முனியம்மாள் ஃபேமிலிக்காகத்தான். ஆனால் கடைசியாக தான் ஜேசன் மற்றும் முனியம்மா ஃபேமிலியை கொண்டு வந்திருந்தார்கள்.

அதிலும் ஜேசன் மனைவியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஜேசன் அவருடைய மனைவியிடம் எப்படி நடந்து கொள்வார்? வீட்டிற்குள் தான் எல்லா போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகளிலும், யாரையும் மதிக்காமல் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார் மனைவியிடமாவது அவர் பாசமாக பேசுவாரா? காதலோடு கொஞ்சுவாரா? என்றெல்லாம் பலரும் காத்திருக்க அவருடைய மனைவியை கடைசியாக உள்ளே அனுப்பி வைத்திருந்தனர்.

இதுதான் காதலா?

மனைவியை பார்த்ததும், இந்த உலகத்திலேயே அழகான பொண்ணு என் பொண்டாட்டி தான் நீ ஜேசன் புகழ்ந்து இருந்தார். பிறகு மனைவியை பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருந்தார். கடைசியாக நேரமாகிவிட்டது நீங்க போகலாம் என்று பிக் பாஸ் சொன்னதும் வாசல் வரை வந்து தனது மனைவியை கட்டிப்பிடித்து சட்டையை கழட்டி தலையை மறைத்துக் கொண்டு அதற்குள் லிப் கிஸ் கொடுத்தது தான் அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதிலும் பிக் பாஸ் டீமுக்கு நல்ல கன்டென்ட் கிடைத்துவிட்டது என்று நினைத்து விட்டார்கள் போல, அந்த சத்தத்தை கூட மியூட் பண்ணாமல் அப்படியே லைவில் ஒளிபரப்பாகி இருக்கிறார்கள்.

முத்தம் கொடுத்த ஜேசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி என்று சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி கிளு கிளுப்பான காட்சிகளை திட்டமிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த வேறு எத்தனை அழகான வழிகள் இருக்கின்றன? அவர்களுடைய உரையாடல் ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறை, சின்ன சின்ன சண்டைகள், பாசமான தருணம் என எவ்வளவோ இருக்கின்றன. அதை விட்டுட்டு பார்வையாளர்களே அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இப்படி உதட்டு முத்தம் கொடுத்து தான் அன்பை காட்ட வேண்டுமா? சமீபத்தில் திருமணம் முடித்து இந்த வீட்டிற்கு வந்த டிடிஎஃப் வாசன் கூட தனது மனைவியிடம் கண்ணியமாக நடந்து கொண்டார்.

ஆனால் ஜேசன் இதுபோன்று நடந்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதையும் தாண்டி இப்படிப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்படுவது நிகழ்ச்சியின் தரம் குறித்த விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. காதலை காட்டுவதற்கும் மலிவான காட்சிகளை வைத்து பார்வையாளர்கள் ஈர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை நிகழ்ச்சி குழு புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

மற்ற மொழி பிக் பாஸ் சம்பவம்

ஹிந்தியில் இதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை நடந்திருக்கிறது. அதேபோல ஜெசனும் சட்டையை கழட்டி முகத்தை மறைத்து முத்தம் கொடுத்து, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கரைத்துக் குடித்துவிட்டு வந்தேன் என்று சொல்லாமல் சொல்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் பார்க்கிறார்கள் இதில் ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சனம் வந்தபோது விஜய் சேதுபதி ரிமோட் உங்க கையில் தான் இருக்கு, வேண்டாம் என்றால் நீங்கள் சேனலை மாத்திட்டு போயிட்டே இருக்கலாம் என்று பேசி இருந்தார். இப்போது நடக்கும் விஷயங்கள் கூட பிடிச்சா பாருங்க இல்லனா போங்க என்று சொல்வது போலத்தான் இருக்கிறது. புரிஞ்சுக்கோங்க மக்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+