சென்னை வானகரம் தனியார் நிறுவன கழிவறையில் ஷாக்.. இப்படியும் ஒரு மேனேஜர்.. சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.இந்த நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் நடந்த அசிங்கமான சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.இப்படியும் ஒரு மேலாளர் இருப்பாரா என்று எண்ணும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து வீடியோ எடுத்தமேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன தான் பெண்கள் வேலைக்கு வந்தாலும், உயர்ந்த பதவிகளுக்கு சென்றாலும், ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளை செய்தாலும், வக்கிரமான அதிகாரிகள், மேலதிகாரிகள் மற்றும் சக ஆண் ஊழியர்களால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. பெண்களை வக்கிரமாக பார்க்கும் சில ஆண்கள் அவர்களை, வீழ்த்த பல வழிகளை கையாளுகிறார்கள். சிலர் காதல் என்ற பெயரிலும், சிலர் ரகசிய கேமரா வைத்து படம் பிடிப்பது என்று இருக்கிறார்கள்.அப்படி ரகசிய கேமரா வைத்தவர் வானகரத்தில் சிக்கியுள்ளார்.

சென்னை வானகரத்தி தனியார் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது.இங்கு ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்து உள்ளது பொழிச்சலூர். இந்த ஊரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் வானகரம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த வாஷ்பேசின் அடியில் சிறிய அளவிலான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். வானகரம் போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் வந்து நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த வன்னியராஜ் (வயது 38) என்பவர், சில நாட்களாக இரவு நேரங்களில் பெண்கள் கழிவறைக்குள் சென்று நீண்டநேரம் கழித்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் வானகரம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆவடியை சேர்ந்த மேலாளர் வன்னியராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சிறிய ரக கேமரா மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரகசிய கேமரா வைத்து ரசிக்கும் இதுபோன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.


Click it and Unblock the Notifications
