முதலில் கெமிக்கல்.. இப்போ பாக்டீரியா.. மீண்டும் சிக்கலில் பிஸ்லெரி.. வழக்கு போடும் FSSAI

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிஸ்லெரி நிறுவனத்துக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஏற்கனவே கோவாவில் சேகரிக்கப்பட்ட மாதிரி சர்ச்சையில் சிக்கிய நிலையில், இப்போது மேற்கு வங்கத்தில் குடிநீர் தயாரிப்பு ஆலையும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரியில் கோலிஃபார்ம் (Coliform) என்ற பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தண்ணீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனமாக பிஸ்லெரி இருக்கிறது. தண்ணீர் என்றாலே பிஸ்லெரி என்ற அளவுக்கு இந்திய சந்தையில் ஒரு வலுவான இடத்தை பிடித்திருந்த பிஸ்லெரிக்கு இப்போது சிக்கல் மேல் சிக்கல் உருவாகியுள்ளது.

Bisleri water India

பிஸ்லெரி

கோவா ஆலையில் அது சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், இப்போது அதன் மேற்கு வங்க ஆலையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரியில் கோலிஃபார்ம் (Coliform) என்ற பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஸ்லெரி மீது வழக்குத் தொடர இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பாக்டீரியா

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டெலிபாரா கிராமத்தில் பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சேகரிக்கப்பட்ட PB 201 என்ற பேட்ச் நம்பர் மாதிரியை பரிசோதித்தபோது கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்ட ஆய்வகத்தில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் கோலிஃபார்ம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கழிவுநீர் கசிவு அல்லது சேதமடைந்த குழாய்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்த வகை பாக்டீரியாக்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அந்த பேட்ச் குடிநீரை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சை

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தொடர்பாகவும் உணவு பாதுகாப்பு ஆணையம் வழக்கு தொடர அனுமதி அளித்தது. அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான புரோமேட் இருப்பதாகவும், பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்தது. இதனால் அந்த பேட்ச் கூட பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் பிஸ்லெரி நிறுவனம் தனது குடிநீர் பாதுகாப்பானது என்று விளக்கம் அளித்துள்ளது. கோவா ஆலையில் 2025 செப்டம்பரில் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு பேட்ச்சில் மட்டுமே பிரச்சினை இருந்ததாக பிஸ்லெரி கூறியுள்ளது. 2025 செப்டம்பர் 30ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை ஆறு மாதிரிகளை சேகரித்ததாகவும், அதில் ஐந்து மாதிரிகள் எந்தவொரு சிக்கலும் இல்லை என தெரிவித்தது. ஒரே ஒரு மாதிரியில் மட்டும் லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் புரோமேட் இருந்ததாகவும், இது அனுமதிக்கப்பட்ட அளவான 10 மைக்ரோகிராமை விட இரு கிராம் அதிகம் என பிஸ்லெரி கூறியுள்ளது.

தீவிர நடவடிக்கை

இதற்கிடையே பாட்டில் குடிநீர் சந்தை முழுவதையும் உணவு பாதுகாப்பு துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் ரேண்டமாக சேகரித்து சோதனை செய்ய பிஸ்லெரி முடிவு செய்துள்ளது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பிரபல நிறுவனங்களின் பெயர் மற்றும் லேபிள்களை போலவே போலியாக பாட்டில்களை விற்க முயலும் நிறுவனங்கள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+