மக்கள் பார்த்துட்டு இருக்காங்க.. CM விஜய் இனியாவது சுயமாக முடிவெடுக்கணும்! தாடி பாலாஜி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தாடி பாலாஜி முதலமைச்சர் விஜய்க்கு தொடர்ந்து அறிவுரைகளை சொல்லி வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவாகரத்து விஜய்க்கு சில கோரிக்கைகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இப்போது திருப்பரங்குன்றம் தீப விஷயத்திலும் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் கடந்து சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீபத்தூணில் தீபம் ஏற்று அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கார்த்திகை தீபத்தன்று வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டன.

Thadi Balaji CM Vijay Tirupparankundram

நீதிமன்ற உத்தரவு

இந்த விவாகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் நவம்பர் 28ஆம் தேதி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை CRPF கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

தாடி பாலாஜி பேச்சு

அதனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக பேசப்பட்ட இந்த விவகாரம் இப்போ இன்னும் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் தான் தாடி பாலாஜி புதிய வீடியோ இருக்கிறார். அதில், "நீதிமன்றம் முதலில் உத்தரவிட்ட போது அரசு தீபம் ஏற்ற அனுமதி கொடுத்திருந்தால், மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும். ஆனால் இப்போது தீபம் ஏற்றியே ஆகணும்னு உத்தரவு வந்து இருக்கு. கோவில் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்கு போயிடுச்சு. மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க. மக்களோட வழிபாடு விஷயங்கள்ல இனிமேலாவது முதலமைச்சர் யாருடைய பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என பேசி இருக்கிறார்.

தொடர்ந்து அட்வைஸ்

ஏற்கனவே இதே விஷயத்தை தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே விஷயத்தை இப்போது தாடி பாலாஜியும் முதல்வருக்கு வேண்டுகோளாகவும், அட்வைஸ் ஆகவும் சொல்லி இருக்கிறார். தாடி பாலாஜி விஜய்யின் நண்பராக இருந்தாலும் தவெக கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆனால் திடீரென அந்த கட்சியில் இருந்து தான் விலகப்போவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் என்னுடைய நண்பருக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் உண்டு என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது தொடர்ச்சியாக முதல்வருக்கு அட்வைஸ் சொல்வது போலவே தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+