திமுக 22, சரத் பவார் 8, YSR 4.. 354 வாக்குகளை திரட்டிய என்டிஏ! இன்னும் எவ்வளவு வாக்கு தேவை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற தேவையான பலத்தை திரட்டுவதில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவரை எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்த திமுக, சரத் பவார் என்சிபி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. இந்த மூன்று கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் என்டிஏவின் பலம் 354 ஆக உயரும். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. இதற்காக நவம்பர் 30ஆம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசியலமைப்பு மசோதா என்பதால் லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுவதால், ஒவ்வொரு எம்பியின் ஆதரவும் முக்கியமாகியுள்ளது.

Delimitation Bill DMK

என்டிஏ

லோக்சபாவில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் தற்போது 3 இடங்கள் காலியாக இருப்பதால், உறுப்பினர்களின் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. அனைவரும் வாக்களித்தால், மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவாக 360 வாக்குகள் தேவைப்படும். இதில் என்டிஏவுக்கு 320 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதனால் மசோதாவை நிறைவேற்ற மேலும் 40 வாக்குகள் தேவைப்படுகின்றன.

திமுக

இந்த சூழலில்தான் திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50 சதவீதம் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த திமுக, புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சரத் பவார் என்சிபி கட்சியும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவிலேயே உள்ளது.. இந்தக் கட்சிக்கு மக்களவையில் 8 எம்பிக்கள் உள்ளனர். இது தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் மக்களவையில் 4 எம்பிக்கள் உள்ளனர். பிராந்திய சமநிலை உறுதி செய்யப்பட்டால் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்த பலம்

இந்த மூன்று கட்சிகளின் எண்ணிக்கையையும் சேர்த்தால் NDA-வுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு:

என்டிஏ- 320
திமுக - 22
சரத் பவார் NCP - 8
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4
மொத்தம் - 354

அதாவது, 360 வாக்குகள் தேவைப்படும் நிலையில் இன்னும் 6 வாக்குகள் குறைவாக இருக்கும். யூபிபிஎல் கட்சியின் ஒரு எம்பி, ஜோரம் மக்கள் இயக்கத்தின் ஒரு எம்பி மற்றும் சுயேச்சை எம்பி உமேஷ் படேல் ஆகியோரின் ஆதரவையும் சேர்த்தால் மொத்தம் 357 ஆகிறது. எனவே, மேலும் சில சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சை எம்பிக்களின் ஆதரவை பெற்றால் எளிதாக அந்த 3 எம்பிக்கள் ஆதரவையும் பெறலாம்.

முக்கியமான கணக்கு

இங்கு இன்னொரு முக்கியமான கணக்கு உள்ளது. அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவும், அவையில் பங்கேற்று வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும் தேவை. எனவே, எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் அவைக்கு வராமல் இருந்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தாலோ, மூன்றில் இரண்டு பங்கு கணக்கிடப்படும் எண்ணிக்கை குறையலாம்.

உதாரணமாக, 540 பேரும் வாக்களித்தால் 360 வாக்குகள் தேவை. ஆனால், வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் பங்கேற்கவில்லை என்றால் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளும் குறையும். நம்பர்கள் இவ்வளவு நெருக்கமாக உள்ளதால் எம்பிக்களின் வருகையும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+