'காலம் காத்திருந்து பதில் சொல்லும்'.. அது இது தானா.. தோற்கடித்த திமுகவே ஜெயிக்க வைக்க போகிறது
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 2014, 2019ல் முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் 2024ல் மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரவில்லை. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது . இப்படி மைனாரிட்டியாக உள்ள பாஜக அரசு, 3ல் இரண்டு ஒரு பங்கு ஆதரவுடன் அரசியல் சாசன அமர்வு மசோதாவையே நிறைவேற்றுவதற்கு உண்டான சூழல் எப்படி உருவானது.. கடந்த ஏப்ரல் மாதம் தோற்கடிக்கப்பட்ட மசோதா, டிசம்பரிலேயே நிறைவேறப்போவது எப்படி என்பதை பார்ப்போம்.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை என்பது உண்மையிலேயே கிடையாது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓரளவு மக்களவையில் பெரும்பான்மை உள்ளது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றும் அளவிற்கு பெரும்பான்மை கிடையாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 368-ன்படி, ஒவ்வொரு அவையிலும் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையும், அவையில் வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் தான், அரசியல் அமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியும். அதுவும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தனித்தனியாக இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். இது உண்மையிலேயே பாஜகவிடம் இன்று வரை கிடையாது.

இதனால் தான் கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு அதாவது தொகுதி வரையறை மசோதாவுக்கு, ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. - மொத்தம் 528 பேர் வாக்களித்த நிலையில், தேவைப்பட்ட 352 வாக்குகளை மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பெறவில்லை. சாதாரண பெரும்பான்மை பெற்றிருப்பது மட்டும் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற போதவில்லை..
எனினும் காலம் காத்திருந்து பதில் சொல்லும் என்பது போல், காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக உடனான கூட்டணியை முறித்தது, அதற்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. பாஜகவின் மசோதா நிறைவேறவும் அதுவே முக்கிய காரணமாக மாறி உள்ளது. எனினும் திமுக அப்படியே சும்மா ஆதரிக்க முடிவெடுக்கவில்லை.. - பழைய மசோதாவில் இருந்த தென மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்த தமிழ்நாட்டின் அச்சத்திற்கு புதிய வரைவு மூலம் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதுவும் முக்கியமான காரணம்.
புதிய மசோதாவில் 1972ம் ஆண்டு மக்கள் தொகை விகிதாசாரப்படியே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை இடங்களை 50% உயர்த்தும் முன்மொழிவினை பாஜக வைத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான இட ஒதுக்கீட்டு விகிதத்தை 2051 வரை பாதுகாக்க வேண்டும். இந்த இரண்டுமே திமுக வைத்த நிபந்தனை.இதனை ஏற்றுக்கொண்டது. திமுக ஏற்றுக்கொண்டது போலவே, சரத்பவாரின் என்சிபி கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் திமுகவுக்கு லோக்சபாவில் 22 எம்பிக்கள் உள்ளனர். சரத்பவாரின் என்சிபிக்கு 8 எம்பிக்கள் உள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக மக்களவையில் 30 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதுதவிர ஒய்எஸ்ஆர் ஜெகனின் 4 எம்பிக்கள் ஆதரவும் உள்ளது . இன்னும் சில சிறிய கட்சிகள் ஆதரவும் கிடைத்துள்ளது. எனவே மசோதா எளிதாக நிறைவேறும் என்றே தெரிகிறது.
அதேபோல் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு கணக்கு என்பது அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்ல; வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்தால் கூட தேவையான வாக்குகளின் எண்ணிக்கை பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எளிதாகும். எனவே தான் ஏப்ரலில் தோல்வி அடைந்த மசோதா, நவம்பரில் நிறைவேறப்போகிறது. அதுவும் யாரால் தோற்கடிக்கப்பட்டதோ, அவர்களாலேயே நிறைவேற்றப்பட வைக்க இருக்கிறது. இது தான் ரஜினிகாந்த் ஸ்டைலில் சொல்வது என்றால் காலம் காத்திருந்து பதில் சொல்வது .. டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.




Click it and Unblock the Notifications
