திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்..யார் மனதும் புண்படாம நடவடிக்கை எடுங்க! ஜிகே வாசன் வேண்டுகோள்
சென்னை: இன்றைக்கு தவெக அரசுக்கு திருப்பரங்குன்றம் முக்கிய பிரச்னையாக உள்ளது. சட்டசிக்கல் ஏற்படாத வகையில் சட்ட நிபுணர்களுடன் பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சென்னை எம்.கே.பி.நகரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கட்சியினரிடம் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்," இன்றைக்கு திருப்பரங்குன்றம் விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறுது. நம் நாடு சட்டத்திற்க்குட்பட்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
ஜிகே வாசன்
இருப்பினும் உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. இன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடுமையான கோட்பாடுகளை தந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுகு்கு மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், ஒரு மாற்று ஆட்சியை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஆறு மாதமாக இந்த ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முயற்சித்து வருகிறது. இன்றைக்கு அரசுக்கு திருப்பரங்குன்றம் முக்கிய பிரச்னையாக உள்ளது.
திருப்பரங்குன்றம்
சட்டசிக்கல் ஏற்படாத வகையில் சட்ட நிபுணர்களுடன் பிரச்னை சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எண்ணம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா இன்று தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு மக்களுக்கு பிரச்னை இல்லாதவாறு திருப்பரங்குன்ற விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். இருதரப்பிலும் விசாரித்துள்ளனர். சட்டசபை உறுப்பினர் தவறான செய்தி அனுப்பினாரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் இந்த விஷயம் முக்கியமாக விசாரித்து வருகின்றனர். த.வெகவின் ஆறு மாத ஆட்சி என்பது இந்த ஆறு மாதத்தில் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது.
சட்டம் ஒழுங்கு
ஐந்து சதவீதமே ஆட்சி முடிந்துள்ளது. இன்னுறும் 95 சதவீதம் உள்ளது. இதன் பின் தான் படிபடிப்பயாக செய்ய முடியும். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கில் பலருக்கு சந்தேகம் எழுகிறது. காவல்துறைக்கு அரசு சுதந்திரம் தந்துள்ளது. காவல்துறையினர் நிச்சயமாக குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். த.வெ.க.,வின் செயல்பாட்டில் எங்களுகு்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஊழலை ஒழிப்போம் என்றனர். அதற்கேற்றவாறு ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல்வேறு பணிகளை பல துறைகளில் ஏற்படுத்தினர்.
இடைத்தேர்தலில் ஆதரவு
இதற்காகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி த.வெ.க.,வுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளித்தது வருங்கால அரசியலுக்கும் ஊழல் ஒழிப்புக்கும் வழிவகுக்கும் என நாங்கள் நம்புகிறோம். தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக காவிரி பிரச்னை உள்ளது. தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்காதது விவசாயிகளை வயிற்றில் அடிக்கும் செயல். இது விவசாயிகளின் வாழ்வாதாரம் பிரச்னை மட்டுமின்றி, உயிர் பிரச்னையாக உள்ளது. கர்நாடக அரசை பொறுத்தவரை விவசாயிகளின் பிரச்னையை ஒரே பிரச்னையாக காண வேண்டும்." என்றார்.


Click it and Unblock the Notifications
