பெண் IPS அதிகாரியை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்தேனா? அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்
ஈரோடு: பெண் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்ததாக சமூக ஊடகங்களில் என் மீது கூறப்படும் வதந்திகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். தன் மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த சில தினங்களாக கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி மீது சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, பெண் காவல் துறை அதிகாரியை போனில் அழைத்ததாக கூறப்படும் விவகாரம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

என் மீதான குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக சொல்லுங்கள். சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நல்லது செய்தால் விமர்சங்கள் வரத்தான் செய்யும். அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது.
இந்த மாதிரி விமர்சனங்களை 25 ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து வருகிறோம். சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுவார்கள். நாங்கள் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்கிறோம். மக்களுக்கு எங்கள் மீது நல்ல எண்ணங்கள் உள்ளன.
முகம் தெரியாதவர்கள் சமூக வலைத்தளங்கள் வெளியிடுவதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. மக்களை சந்திக்கிறோம். மக்களை எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
