ஸ்தானிக பட்டர் என்றால் யார்? திருப்பெருங்குன்றத்தில் மட்டும் ஏன் இந்தப் பெயர் உள்ளது?
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது ஸ்தானிக பட்டர் என்ற வார்த்தை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஸ்தானிக பட்டர்கள் தரப்பில் ஒரு அறிக்கையும் வெளியானது. ஸ்தானிக பட்டர் என்றார் என்ன, அவர்களின் பணிகள் என்ன, திருப்பரங்குன்றத்தில் மட்டும் தான் ஸ்தானிக பட்டர்கள் இருக்கிறார்களா என்பதை விரிவாக பார்க்கலாம்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று ஸ்தானிக பட்டர்கள் அறிக்கை வெளியிட்டனர். தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் பட்டர்கள் இருப்பார்கள். ஆனால் ஸ்தானிக பட்டர்கள் என்ற வார்த்தையே பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

ஸ்தானிக பட்டர்கள் என்றார் என்ன? என்று பொதுமக்கள் பலரும் சிந்திக்க தொடங்கியுள்ளனர். பட்டர்கள் என்றால் வேத, ஆகம விதிகளை கற்று கருவறையில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை குறிக்கும் பட்டம் என்று சொல்லலாம். இந்தியாவில் ஆகம விதிகளின் படி தான் அர்ச்சர்கள் கோயிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி தான் பூஜைகள் நடக்க வேண்டும்.
ஸ்தானிக பட்டர் என்றால், கோயிலும் குறிப்பட்ட சந்நிதிகளில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்கள். அதேபோல் கோயிலில் தலைமுறை தலைமுறையாக பூஜை செய்யும் உரிமை பெற்ற குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் முக்கிய பொறுப்பு என்னவென்றால், கோயிலில் நடக்கும் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் ஆகம விதிகளின் படி நடத்துவது தான்.
அதேபோல் திருவிழா, விசேஷ வழிபாடுகள் உள்ளிட்டவற்றின் போது சடங்குகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் சடங்குகள் மற்றும் திருவிழா நேரங்களின் போது ஆகம விதிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும் அதிகாரமும் ஸ்தானிக பட்டர்களுக்கு இருக்கிறது. பெரும்பாலும் ஸ்தானிக பட்டர்கள் தான் கோயில் மூலவருக்கு ஆபரணங்களை அணிவிப்பார்கள்.
ஸ்தானிக பட்டர்கள் பாரம்பரிய கோயில்களில் அதிகளவில் இருப்பர். மதுரையிலேயே திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் மீனாட்சியம்மன் கோயிலிலும் இருக்கின்றனர். இவர்களின் முக்கிய பணியே, கோயிலும் பாரம்பரிய முறைகளை பாதுகாப்பது தான். இதனால் அறங்காவலர் குழுவினர் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஸ்தானிக பட்டர்களிடம் ஆலோசனை கேட்டு கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
