காங்கிரஸை கண்டுகொள்ளாத சரத் பவார்! "இந்தியா" கூட்டத்தில் கூட கலந்துக்கல! தேசியளவில் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் சரத் பவார் கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அந்தக் கட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர முயல்கிறது. இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தையும் கூட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது.

Sharad Pawar INDIA

பங்கேற்கவில்லை

தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் இருந்த அனைத்து கட்சியினருக்கும் இதில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த கூட்டத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்த கட்சி பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது இந்தியா கூட்டணிக்குள் விரிசலையே ஏற்படுத்தியுள்ளது.

கொந்தளிக்கும் காங்கிரஸ்

இதற்கிடையே சரத் பவார் கட்சியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், எதிர்க்கட்சிகளுக்கு சரத் பவார் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சரத் பவார் கட்சியிடம் 36 எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும், அவரது முற்போக்கு கொள்கைகள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் ராஜ்யசபா தேர்தலில் சரத் பவார் ராஜ்யசபா செல்ல காங்கிரஸ் அவருக்கு அளித்தது.

எங்கள் முதுகில் இப்படி குத்துவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. இப்போது நாங்கள் செய்த தவறு எங்களுக்கு தெரிந்துவிட்டது. இதை மறக்க மாட்டோம். மேலும், கொள்கைகளைவிட அதிகாரத்துக்கும் பணத்துக்குமே சரத் பவார் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது. அந்தக் கட்சியின் முடிவு இந்திய ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவதாகக் கூறும் சரத் பவார், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்று தாங்கள் நம்பினோம். ஆனால், எங்கள் முதுகில் குத்திவிட்டார்" என்றார்.

திமுக, என்சிபி

ஏற்கனவே திமுக இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 50% அதிகரிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த நம்பரை அப்படியே வைத்து கொள்வது என இரண்டிற்கும் பாஜக அரசு ஒப்புக்கொண்டதால் திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், இப்போது என்சிபியும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது இந்தியா கூட்டணியில் புகைச்சலையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவியையும் பாஜக கொடுக்க ரெடியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் மிக பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+