திருப்பரங்குன்றம் தீபம் LIVE: மலை உச்சியில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.. கட்டுப்பாடு விதித்த CRPF
Live
Subscribe to Oneindia Tamil
மதுரை: நேற்றைய தினம் திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவுள்ளது. இதன் காரணமாக மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையின் பாதுகாப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தீபம் ஏற்ற தேவையான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பாஜகவின் மலிவான மதவாத அரசியலை நிராகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாதீர்கள். அதற்கு எதிராக முழு பலத்துடன் போராடுங்கள். இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை நெருக்கடியையும், நம் வாழ்வை சிக்கலாக்கும் பிற பல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக, மோடி அரசு தமிழ் சமூகத்தில் மதவாதத்தை தூண்டுவதில் மும்முரமாக உள்ளது. குஜராத்தை சேர்ந்த இருவர் அல்லது டெல்லியில் இருப்பவர்கள் சொல்வதை வைத்து தமிழ்நாடு இயங்க அனுமதிக்காதீர்கள் - கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சவுரவ் தாஸ்
நான் தமிழர்களுடன் வளர்ந்தவன். மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை தான் தமிழ் சமூகத்திற்கு முக்கியமானது என்பது எனக்கு தெரியும். ஆனால், மோடியின் கட்சி தமிழ்நாட்டை இந்து- முஸ்லிம் அடிப்படையில் மத ரீதியாக பிளவுபடுத்த தீவிரமாக முயல்வதை பார்க்கும்போது, எனக்கு மிகுந்த வருத்தமும் கோபமும் ஏற்படுகிறது. உச்ச நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று, இந்த உத்தரவை பிறப்பித்த விதம் நம் நாட்டிற்கு நல்லதல்ல. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஒரு மாநிலம், தீப்பற்றி எரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது- கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சவுரவ் தாஸ்
திருப்பரங்குன்ற விவகாரத்தில் முந்தைய அரசும், இப்போதைய அரசும் மதநல்லிணக்கத்தையே விரும்புகிறது. நாம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி தந்த பிறகும் உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தீபம் சார்ந்தது மட்டுமில்லை.. மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால். வரும் காலங்களில் ஜனநாயகத்தையும் மாநில உரிமைகளையும் விரும்பும் சக்திகள் ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்வோம் – அமைச்சர் ஷாஜகான்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
#WATCH | Madurai, Tamil Nadu: Preparations are underway for the ceremonial Karthigai Deepam to be lit at the Deepathoon stone pillar today at Thiruparankundram Hill. https://t.co/1JYFqjhCBg
— ANI (@ANI) November 28, 2026



Click it and Unblock the Notifications
