மிஷ்கின் இயக்கிய ட்ரெயின் படம் எப்படி இருக்கு..? வேகமாக நகரும் கதை.. நடிகர் சொன்ன முதல் ரிவ்யூ!
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள ட்ரெயின் திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் இப்போ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதிலும் அந்த படத்தை பற்றி விஜய் சேதுபதி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
பொதுவாகவே மிஷ்கின் படங்கள் என்றாலே வழக்கமான கதைக்களத்தை தாண்டி மனிதர்களின் உணர்வுகள், வலி, கோபம், அன்பு என வித்தியாசமான விஷயங்களை பேசும். அதுபோன்ற ஒரு அனுபவம் இந்தப் படத்தில் இருக்கும் என விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

விஜய் சேதுபதி ட்ரெயின் ரிவ்யூ
இந்த படத்தை பற்றி விஜய் சேதுபதி பேசுகையில்," ரயிலை விட மிக வேகமாக இப்படத்தில் கதை நகரும். 5 மணி நேர பயணத்தில் பழிவாங்குதல், கோபம், மரணம், அழகான காதல், குழந்தை பிறப்பு என பல்வேறு உணர்வுகள் நிறைந்திருக்கும். படம் முழுவதும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். மிஸ்கினுக்கே உரித்தான அன்பும், மனிதநேயமும் படத்தில் இடம்பெற்றுள்ளது" என்று சொல்லி இருக்கிறார்.

மனிதர்களின் வலியையும், அன்பையும் காட்டுவதில் மிஸ்கினின் தனித்துவம். ட்ரெயின் திரைப்படத்திலும் அதே போன்ற உணர்வு பூர்வமான தருணங்கள் இருக்கும் என்பதால் வெறும் ஆக்சன் திர்லராக மட்டுமல்லாமல் மனதோடு தொடர்புபடும் படமாகவும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், நாசர், நரேன், யூகி சேது, கே எஸ் ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க ரயில் பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ரயிலில் தொடர்ந்து பயணிக்கும் காட்சிகளுக்கு அதிக அளவில் சிஜி வேலை செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இப்படி ஒரே ரயில் பயணத்தில் இத்தனை உணர்வுகளை மிஸ்கின் எப்படி இணைத்து இருக்கிறார்? என்பதை பார்க்க டிசம்பர் 4ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியது தான். ஏற்கனவே சமீப காலமாக ரொம்பவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் எல்லாமே தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு அடி வாங்கி விடுகிறது. ஆனால் எதிர்பார்க்காத, மக்களுடன் கனெக்ட் ஆகுற மாதிரியான படங்கள் தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் இந்த படம் எந்த மாதிரியாக இருக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
