தொகுதி மறுவரையறை.. திமுகவின் நிலைப்பாட்டிற்கு இதுதான் காரணம்.. ஓபனாக பேசிய தமிமுன் அன்சாரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் திமுகவின் நிலைப்பாட்டிற்கான காரணம் என்ன என்று மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இம்முறை தொகுதி மறுவரையறை மசோதாவை தவறவிட்டால், அடுத்த ஆண்டு முழு பலத்துடன் பாஜக அவர்களின் விருப்பப்படி தொகுதி மறுவரையறை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. திமுக முன் வைத்த தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமான 7.18% குறையக் கூடாது என்றும், 25 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர வேண்டும் என்ற நிபந்தனைகள் மசோதாவில் பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறது.

DMK Delimitation BJP

இது தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதேபோல் தவெக தலைமையும் வாய் மூடி மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் பங்கேற்றன. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

இதன்பின் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் எங்களுக்கு அழைத்து வந்தது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எந்த பாதை நோக்கி செல்கிறது, என்ன காரணத்தால் முடிவுகளை எடுக்கிறோம் என்பதையெல்லாம் விளக்கி பேசினார்கள். நாங்கள் எஸ்டிபிஐ, மமக, கொமதேக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சில ஐயங்களை எழுப்பினோம்.

அதுதொடர்பாக உரையாடினோம்.. ஏற்கனவே அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 1971ன் மக்கள் தொகை அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற நம் கோரிக்கைகளை மசோதாவில் சேர்த்துள்ளனர். அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

தொகுதி மறுவரையறைக்காக போடக் கூடிய கமிட்டியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 பிரதிநிதிகள் நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அதில் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று கூறினோம். அதனை நிச்சயமாக பேசுவதாக கூறினார்கள். இதனை தவறவிட்டால், அடுத்த ஆண்டு முழு பலத்துடன் அவர்கள் விருப்பப்படி எதையும் செய்யக் கூடிய அபாயகரமான சூழல் இருக்கிறது.

கசப்பான சூழலில் எதை செய்தால் அவர்களுக்கு ஒரு தடுப்பணையை போட முடியும் என்ற அடிப்படையில் வியூகம் அமைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை சாகடிப்பதில் பாஜக உறுதியாக உள்ளது. என்னதான் நாடாளுமன்ற, சட்டசபை எண்ணிக்கையை உயர்த்தினாலும், 850 பேர் இருக்கும் போது பெரிதாக பேச வாய்ப்பு இருக்காது. ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கி இந்தியா நகர்வதாக கவலையில் உள்ளோம். இந்த நேரத்தில் குறைந்தபட்ச பாதுகாப்பை செய்ய முடியுமோ, அதனை திமுக உடன் இருந்து செய்கிறோம் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+