தமிழகத்திற்கு இப்போ 39.. இனிமேல் 59 தொகுதிகள்? புதிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் குறைந்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தற்போதைய இட ஒதுக்கீட்டு விகிதம் தொடரும் என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விளக்கமளித்துள்ளார். லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 816 ஆக உயர்த்தப்பட்டாலும், தமிழகத்தின் இடங்களும் 39இல் இருந்து 59ஆக உயரும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

Delimitation Tamil Nadu

தொகுதி மறுவரையறை மசோதா

இதன் காரணமாகவே கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தரவில்லை. 3ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் மீண்டும் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த முறை மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் மொத்தமாக 50% அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தொகுதி மறுவரையறை நடந்தால் தொகுதிகள் எப்படி மாறும் என்பது தொடர்பாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விளக்கமளித்துள்ளார். அதில், மக்களவையின் மொத்த இடங்கள் 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்கப்பட்டாலும், தென் மாநிலங்களின் இட ஒதுக்கீட்டு விகிதத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு

தற்போது தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இது மொத்தமுள்ள 543 இடங்களில் 7.18 சதவீதமாகும். புதிய தொகுதி மறுவரையறைக்கு பிறகு தொகுதிகளின் எண்ணிக்கை 59ஆக உயரும். அதாவது மொத்தம் 816 இடங்களில் தமிழ்நாட்டின் பங்கு 7.23 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். கர்நாடகாவில் தற்போதுள்ள 28 இடங்கள் 42ஆக உயரும். அதாவது கர்நாடகாவின் பிரதிநிதித்துவம் இப்போது இருப்பதை போலவே 5.15 ஆக நீடிக்கும்.

தென் மாநிலங்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது இருக்கும் 25 இடங்கள் 38 ஆகவும், தெலங்கானாவில் 17 இடங்கள் 26 ஆகவும், கேரளாவில் 20 இடங்கள் 30 ஆகவும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து தென் மாநிலங்களையும் சேர்த்துப் பார்த்தால், தற்போது 543 இடங்களில் 129 இடங்கள் உள்ளன. இது 23.76 சதவீதமாகும். மறுவரையறைக்குப் பிறகு 816 இடங்களில் 195 இடங்கள் கிடைக்கும் என்றும், மொத்த இடங்களில் தென் மாநிலங்களின் பங்கு 23.90 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

இது குறித்து மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மேலும் கூறுகையில், "தொகுதி மறுவரையறையில் ஒரு முக்கிய அம்சம், மாநிலங்களுக்கு இடையே தற்போது உள்ள இடங்களின் விகிதத்தை தொடர்ந்து பராமரிப்பதாகும். தெற்கில் இருந்தாலும் சரி, வடக்கில் இருந்தாலும் சரி, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி முக்கியத்துவம் உள்ளது. வளர்ச்சி அதிகரிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவத்திலும் சமநிலையைப் பராமரிப்பது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+