அரபு கட்சிகள் வேண்டவே வேண்டாம்! 50:50 டீலில் இஸ்ரேல் பிரதமர் பதவியை தாரை வார்க்க தயாராகும் நெதன்யாகு

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: இஸ்ரேலில் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய வேண்டாம். நாம் வேண்டுமானாலும் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிக்கலாம். அதிலும் நீங்களே (காடி ஐசன்கோட்) முதலில் பிரதமராக இருங்கள். அதன்பிறகு நான் பிரதமராகிறேன் என்று தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறங்கி செல்ல தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

israel-pm-benjamin-netanyahu-likely-to-offer-rival-gadi-eisenkot-th-pm-post-in-a-rotational-governme

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. ஒரு மாதம் ஆகியும் எந்த கட்சியாலும் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததுதான்.

மொத்தமுள்ள 120 இடங்களில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் யாரும் மேஜிக் நம்பரை தொடவில்லை. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

நெதன்யாகவின் 'லிகுட்' கட்சி மட்டும் தனித்து 27 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தது. மறுபுறம் முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான காடி ஐசன்கோட்டின் 'யாஷர்' கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 61 இடங்கள் தேவை என்பதால் இரு கூட்டணிக்கும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங் மேக்கராக மாறின. இந்த அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என நெதன்யாகு அறிவித்துவிட்டார். அதேபோல் காடி ஐசன்கோட்டும் தயக்கம் காட்டுகிறார். இஸ்ரேல் என்பது யூத நாடு. இப்படி இருக்கும்போது அரபு கட்சிகளை அரவணைத்து ஆட்சியை பிடித்தால் அது எதிர்கால தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பது தான் இருவரின் தயக்கத்துக்கும் முக்கிய காரணம்.

இதனால் கடந்த ஒரு மாதமாகியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருகட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றுவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது அரசியல் எதிரியான காடி ஐசன்கோட்டிடம் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை இருவரும் பகிர்ந்து கொள்ளவும், முதல் 2 ஆண்டுகள் காடி ஐசன்கோட் பிரதமராகவும், அதன்பிறகு சுழற்சி முறையில் அடுத்த 2 ஆண்டுகள் நெதன்யாகுவும் பிரதமராக பணியாற்ற தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் தீவிர ஆலோசனையில் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை இஸ்ரேல் நாட்டின் 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதில், ''காடி ஐசன்கோட்டுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது பற்றி நெதன்யாகு ஆலோசித்து வருகிறார். பிரதமர் பதவியின் 4 ஆண்டுகாலத்தை தலா இரண்டு ஆண்டுகள் என பிரித்து சுழற்சி முறையில் ஆட்சி செய்யவும், முதல் 2 ஆண்டுகள் காடி ஐசன்கோட் பிரதமராகவும், அதன்பிறகு அடுத்த 2 ஆண்டுகள் நெதன்யாகு பிரதமராகவும் பணியாற்றவும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இறுதியானால் அதுபற்றி நெதன்யாகு, காடி ஐசன்கோட்டிடம் பேசுவார்.

நெதன்யாகுவை எடுத்து கொண்டால் அரசியல் தந்திரங்களில் வல்லவர். ஆனால் தற்போது அவரால் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை. இதனால் அரபு கட்சிகளிடம் பணிவதை விட எதிரியான காடி ஐசன்கோட்டிடம் பணியலாம் என்ற முடிவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எப்படியாவது தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெஞ்சமின் நெதன்யாகு நினைக்கிறார். அதற்கான கடைசி முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் நெதன்யாகுவின் இந்த முடிவை அவரது கட்சிகளை சேர்ந்த பலரும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+