Perunthurai: பெருந்துறை இடைத்தேர்தல்! வரலாற்று வெற்றி பெறுவோம்! செங்கோட்டையன் சிலாகிப்பு!
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அந்தத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றியை பெறும் என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய திட்ட பணிகள் குறித்தும், எந்தெந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் துறை சார்ந்த அதிகாரியுடன் ஆலோசனைக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், "ஈரோடு மாவட்டத்தில் பட்டாக்கள் வழங்குதல், சாலை , குடிநீர் வசதி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
வரப்பெற்றுள்ள மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்" என்று கூறினார் . தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,
"இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது" என்றும் கூறினார். தங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே பருவ மழை பெய்வதை தொடர்ந்து அணை திறந்து விடப்படும்" என்றும் கூறினார்.
மேலும், "பெருந்துறை இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். தவெக வரலாறு காணாத வெற்றியை பெறும்" என்றும் கூறினார்.



Click it and Unblock the Notifications
