கோவை, நெல்லை, குமரி உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை விளாசும்.. வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களில் காலையில் இருந்தே மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Heavy rain Meteorological Centre Kanyakumari weather

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதே போன்று இன்று விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் திருச்சி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+