தலைமறைவான முத்துக்குமரன்.. FIR போட்டு 10 நாளாச்சு.. விரக்தியில் வாஹதா போட்ட புது போஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கும், சமூக வலைதள பிரபலமான வாஹதாவுக்கும் இடையில் உள்ள பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. இருவரும் மாறி மாறி புகார் கொடுத்த நிலையில், தற்போது வாஹதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, மீண்டும் இந்த விவாகரத்தை பற்றி பேச வைத்திருக்கிறது.

வாஹதா பதிவு
அந்த பதிவில்," FIR போட்டு இதோட 10 நாள் ஆட்சி. கம்ப்ளைன்ட் கொடுத்து கமிஷனர் நடவடிக்கை எடுக்க சொல்லி இதோட 13 நாள் ஆச்சு. என் டார்லிங் எங்கே? நானும் ஒரு ஆணாக பிறந்திருக்கக் கூடாதா? அப்படி இருந்திருந்தால் மற்ற பெண்களுக்கும் இதே போல செய்துவிட்டு, அவர்கள் நீதி கேட்கும் போது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இப்படி நீதி கிடைக்காத பெண்ணாக பிறப்பதற்கு பதிலாக ஆணாகவே பிறந்திருக்கலாம்" என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறது.

முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு
அதாவது, பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு அலைய வேண்டியது இருக்கு ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் எந்த பதிலும் சொல்லாமல் தலைமறைவாக இருக்க முடிகிறது என்று ஆதங்கத்தை நையாண்டியாக வெளிப்படுத்தி இருக்கிறார். முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, உடல் ரீதியாக உறவு வைத்து விட்டு பிறகு திருமணத்திற்கு மறுத்ததாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
ஏற்கனவே போட்ட பதிவு
அதோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது FIR பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அவருடைய வீட்டில் பூட்டு போடப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வாஹதா தான் ஒரு பதிவு வெளியிட்டு இரந்தார். அதில், "முத்துக்குமரன் மீது கொடுத்த வழக்கிற்கு செலவு இருக்கிறது, அதற்காக பார்ட் டைம் வேலை தேவைப்படுகிறது. 3 அல்லது 4 மணி நேரம் மாலை நேரத்தில் வேலை செய்வதற்கு ஏதாவது வேலை இருந்தால் எனக்கு சொல்லுங்கள், அது பிடித்திருந்தால் நான் உங்களிடம் பேசுகிறேன்" என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

அதிகமான ட்ரோல்
இது கூட அதிகமான விமர்சனங்களை பெற்றது. பலரும் அப்போது வாஹதாவை கலாய்த்து ட்ரோல் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அடுத்தடுத்த சில பதிவுகளை வாஹதா வெளியிட்டு இருந்தார். இப்போது மீண்டும் முத்துக்குமரனை தாக்கி அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். தீபாவளிக்கு வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய முத்துக்குமரன் இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகிறார்? இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
முத்துக்குமரன் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், வாஹதா தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? காவல்துறை விசாரணையில் என்ன முடிவு கிடைக்கும் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
